வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 14
⛰️🌸⛰️🌸⛰️🌸⛰️🌸⛰️🌸⛰️
🫧*இன்றைய நித்தியக்கடன்*
🫧 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🫧 இன்றைய சாதகம்
🫧 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🫧 இன்றைய நற்சிந்தனை
🫧 உள்ளமைப்பு புறஅமைப்பு என்று இருவேறு அமைப்புகள் இருக்கிறது. இந்த அமைப்பின் தன்மையே எண்ணமாக செயலாக பேச்சாக வெளிப்படுகிறது. புறதோற்றத்திற்கு அழகாக, வசீகரமாக இருப்பதெல்லாம், உள்அமைப்பில் அப்படி இருப்பதில்லை. புறத்தோற்றத்தில் அழகை வசீகரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அக அழகு, வசீகரம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது உயிரின் தன்மையை பிரதிபலிக்கக் கூடியது. அது உயர்ந்த செயல் பதிவுகளை அடிப்படையாக கொண்டது. இரண்டொழுக்கப் பண்பாடு 80% வாழ்ந்த தன்மையாகும். அகஅழகு அகத்தன்மை.
🫧 இன்றைய தற்சோதனை
🫧 இன்றிலிருந்து முயற்சிக்கலாம், அகத்தின் உள் அமைப்பின் தன்மையை உயர்த்துவதற்கு. "இரண்டொழுக்கப் பண்பாட்டை" கடைபிடிக்கலாம். கடைபிடிக்கும் போது ஆங்காங்கே, இடர்பாடுகளும், இன்னல்களும், சோதனையும் வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டி நம்மை நாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தானே தகவமைத்துக் கொள்ள கூடிய சிறப்பான அமைப்பு, மனித கரு மையம். தற்சோதனையில் வைராக்கியத்தோடு எப்போதும் இருந்து பழகுங்கள். அனைத்து வகையான சிறப்புக்களும் உங்களை வந்து சேரும்.
🫧 இன்றைய பண்புப்பயிற்சி
🫧 உண்மையான உண்மையை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள், அந்த உண்மையோடு வாழ்ந்து பழகுங்கள். உண்மைக்கு தயவுசெய்து உங்கள் மனதில், செயலில்,பேச்சில் இடம் கொடுங்கள். இந்த பண்புதான் உங்களை உளவியலில் இயற்கையின் ரகசியத்தை உணர்வதில் உயர்த்த கூடியதாகும். இந்த உண்மையை நீங்கள் அலட்சியம் செய்யும் போது, அதன் மூலமாக உங்களுக்குள் அடங்கி இருக்கக்கூடிய இறைஞான தன்மை அடைக்கப்படுகிறது. இறைஞான தன்மையை வளர்த்துக் கொண்டால் போதும். அது எல்லோருக்குள்ளும் உள்ளடக்கமாக இருக்கிறது. ஆகவே தற்போது உங்களுக்குப் புரிந்த, தெரிந்த இறைநீதியில், இயற்கையின் சட்டத்தை மதித்து உண்மையாக வாழும் பண்பில் உயர்வீராக. உணர்வீர்களாக. வாழ்க வளமுடன்...
🫧 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🫧 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment