வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 13
🧿🕳️🧿🕳️🧿🕳️🧿🕳️🧿🕳️🧿
🕸️ இன்றைய நித்தியக்கடன்
🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🕸️ இன்றைய சாதகம்
🕸️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🕸️ இன்றைய நற்சிந்தனை
🕸️ பரபரப்பாக ஓடி வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் அமைதியாகவும், நிதானமாகவும் நம் ஆழ்மனதிற்கு அப்பால் அமைதி, அமைதி, அமைதி, என்ற மௌன ஓசையை ஒளிர விட வேண்டும். மனதிற்கு சற்று ஓய்வு கொடுங்கள் மனம் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். ஓய்வு, ஓய்வு, ஓய்வு. உங்களால் கொடுக்கப்படும் ஓய்வுக்கு மனம் மதிப்பளித்து தன்னை மேலும் ஒரு படி உயர்த்திக் கொள்ளும் மனதின் மதிப்பை உணர்ந்து அதற்கு தக்கதொரு மதிப்பைளித்து மனம் மனமாக வாழும் வழிமுறைகளை உருவாக்குவோம்.
🕸️ இன்றைய தற்சோதனை
🕸️ நாம் பேசாத போது இறைவன் நம்மோடு பேசுகிறான். நாம் அமைதியாக, மனதை ஓய்வாக வைத்திருக்கும் போது இறைவனின் குரல் ஒலிக்கிறது. உள்ளுணர் தன்மையை வளர்த்துக் கொள்வதற்கு தற்சோதனையே சிறந்த செயல்திட்டமாகும். மனதிற்கு ஏற்புத்திறன் பெருக வேண்டும் என்றால் அதற்கு தகுந்ததொரு பயிற்சி முறை தேவை அந்த பயிற்சி முறைதான் நமக்கு தற்சோதனைகளாக வழங்கப்பட்டிருக்கிறது இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் காண வேண்டியது அவரவர் தம் பொறுப்பும் கடமையுமாகும்.
🕸️ இன்றைய பண்புப்பயிற்சி
🕸️ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முயற்சி செய்வோம். கருமைய தன்மைக்குத் தக்கவாறு விளைவு கூடலாம், குறையலாம்.
இந்த உண்மையை உணர்ந்து எதிர்பார்ப்பில்லாத மனோபாவத்தை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும் எந்த ஒன்றை நாம் அறிந்து கொண்டாலும் அது நம் கருமைய தன்மைக்கு ஏற்ப இறைவனால் வழங்கப்பட்டது என்ற பெருமையை உணர்ந்து எல்லையில்லா தெய்வ நிலையை மனதின் தன்மையை உயர்த்திக்கொண்டு உணரும் பண்பில் உயர்வோம், வளர்வோம்,
வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🕸️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🕸️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment