வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 12
♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️🌀♦️
🔮 இன்றைய நித்தியக்கடன்
🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔮 இன்றைய சாதகம்
🔮 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🔮 இன்றைய நற்சிந்தனை
🔮 அகஸ்பரிசம், அகச்சுவை, அக நுகர்ச்சி, அகப்பார்வை, அக ஓசை இவையாவும் இருக்கிறது. புலன்கள் வழியாக விரிந்து புற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் செலவாகி கொண்டிருக்கக்கூடிய ஜீவகாந்தத்தை, அகம் நோக்கி திருப்பி உள்முகமாக அதே ஜீவகாந்ததிற்கு பயிற்சி கொடுக்கும்போது, மேற்சொல்லப்பட்ட அத்துணை அனுபவமும் ஏற்படுகின்றன. மனதிற்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் இந்த யோக சாதனை சாத்தியமே.
🔮 இன்றைய தற்சோதனை
🔮 சின்ன சின்ன செய்கைகளிலிருந்து நம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். புலன்களுக்கு அடிமையாக நாம் வாழும் முறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, மேல்நோக்கு தன்மைக்கும் பயிற்சி முறைக்கும் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். உணவில் சுவைகளை குறைத்துக்கொண்டு, அதனை இனிமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள், ஒரு பாடலில் உள்ளுக்குள் சின்னதாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஓசையை கூர்ந்து கவனித்து பழகுங்கள், வெயிலில் செல்லும் போது வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று சொல்லிப்பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். அருவருப்பான மன உணர்வுகளை, சினம், கவலை, உணர்ச்சி வயப்பட்ட இவைகளை அறவே விட்டுவிடுங்கள். இவைகளையெல்லாம் தற்சோதனை செய்து பலநாள் பழக பழக அந்த ஞான அனுபவம் ஒருநாள் உண்டாகும்.
🔮 இன்றைய பண்புப்பயிற்சி
🔮 இவ்வாறாக புலன்களுக்கு நுணுக்கமான பயிற்சி கொடுப்பதன் மூலம் அகம் நோக்கி புலன்களை திருப்ப முடியும். எப்போதும் உங்கள் வாழ்க்கையை இப்படியே வாழுங்கள் என்று நான் சொல்லவில்லை. அவ்வப்போது இது போன்ற பயிற்சியை மனதிற்கு கொடுங்கள். மனதை பக்குவப்படுத்துங்கள், ஞானத்திற்கு தயார் படுத்துங்கள். எது எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பண்பில் எல்லோரும் உயர்வு பெறுங்கள். "அவன் நீ! ஒன்றாய் அறிந்த இடம், அறிவின் முழுமை அது முக்தி". வாழ்க வளமுடன்...
🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment