வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூன் 09
🚥♾️🚥♾️🚥♾️🚥♾️🚥♾️🚥
🪻 இன்றைய நித்தியக்கடன்
🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🪻 இன்றைய சாதகம்
🪻 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🪻 இன்றைய நற்சிந்தனை
🪻 உடல் சட்டமென்றும், உயிர் சட்டமென்றும் நிறைய இருக்கிறது. உடலுக்கு தேவையான அளவு முறை மீறி உணவை உண்பது, உடல் சட்ட விரோதமாகும். முறையில்லாத எண்ணங்கள் மனதில் எழும் போது அதுவும் சட்டவிரோதமாகும். இதுபோலவே உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தில் அளவு முறை மீறுவது சட்டவிரோதமாகும், வன்முறையாகும். மௌனத்தில் ஆழ்ந்து இதனை நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள், இதனுடைய உண்மை விளங்கும்.
🪻 இன்றைய தற்சோதனை
🪻 இந்த புண்ணிய பூமியில், புண்ணிய பிறவியில், நமக்கே தெரியாமல், நமக்கு நாமே செய்து கொள்ளும் பாவங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. உடல் சட்டம், உயிர் சட்டம், காந்த சட்டம், பஞ்சபூத சட்டம், பிரபஞ்ச சட்டம் இந்த சட்ட விதிமுறைகளை நாம் சரியாக புரிந்து கொண்டு அதன் பின்னர் அதற்கு ஏற்றார்போல் நம்மை ஒழுங்கு படுத்தும் முறையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதில் நம்மை ஆழமாக ஈடுபடுத்தி எப்போதும் விழிப்பு நிலையிலிருந்து இறை சட்டத்தை அதன்வழி நின்று செயல்புரிய வேண்டும். அந்த விழிப்பு நிலைக்கான பயிற்சி முறையே வேதாத்திரியமாகும்.
🪻 இன்றைய பண்புப்பயிற்சி
🪻 எதிலெல்லாம் இருந்து நாம் அளவு முறை காத்துக் கொள்கிறோமோ, நினைக்கிறோமோ அவையெல்லாம் உயிருக்கு உகந்த செயல்களாகும். உயிருக்கு விரோதமில்லாத செயல்களில் நம்மை இணைத்துக் கொண்டு அத்தகைய சிறந்த பண்பில் நாம் உயர வேண்டும். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பவிளைவு தராது தன்னுடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் பயன்படுத்துவதே உயிருக்கு உகந்த செயல் பண்பாகும். இந்தப் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து ஓங்குவோம். வாழ்க வளமுடன்...
🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment