நித்தியக்கடன் ஜூன் 08 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 08


☄️🌀☄️🌀☄️🌀☄️🌀☄️🌀☄️


🍃 இன்றைய நித்தியக்கடன்


🍃 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍃 இன்றைய சாதகம்


🍃 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🍃 இன்றைய நற்சிந்தனை

  

🍃 வாழ்க்கையை மூன்று விதமாக பிரிக்கலாம்: 1. உடலியல் வாழ்க்கை, 2. மனயியல் வாழ்க்கை, 3. உயிரியல் வாழ்க்கை. இந்த மூன்று நிலைகளிலும் நம்முடைய மனம் எவ்வளவு காலம், எவ்வளவு நேரம், எவ்வளவு அனுபவங்களை ஏற்படுத்திக் கொண்டு இயங்குகிறது. அதுவே நம்முடைய அன்றாட தேவையாகவும் செயல்பாடாகவும் மாறிவிடுகிறது. தேவைகள் மூன்று வகைப்படும், உடல் சார்ந்த தேவைகள், மனம் சார்ந்த தேவைகள், உயிர் சார்ந்த தேவைகள். இவற்றில் பெரும்பாலும் நாம் உடல் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே முயற்சிக்கின்றோம்.


🍃 இன்றைய தற்சோதனை


🍃 உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும், இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஏழு ஆதாரங்களோடு, பூரணமாக இணைந்து இயங்கும் போது அங்கே மனம் சார்ந்த தேவைகள், உயிர் சார்ந்த தேவைகள், நிறைவேற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள், முயற்சிகள், முன்னேற்றங்கள் உருவாகிறது. இதற்கு உடற்பயிற்சி, தியானம், தற்சோதனை, காயகல்பம் என நான்கு விதமான பயிற்சிகளும் உள்ளமைப்பாக இருந்து தூண்டிவிடுகின்றன.


🍃 இன்றைய பண்புப்பயிற்சி


🍃 தன்னைத்தானே ஆய்வு செய்வதற்கும், தன்னுள் இருக்கும் உண்மையை உணர்வதற்கும், ஏற்றதொரு பயிற்சியாய் வேதாத்திரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. உடலை தயார் செய்து மனதை உயர்த்தலாம், மனதை தயார் செய்து உயிரை அறிந்து கொள்ளலாம், உயிரை தயார் செய்து இறைநிலையோடு கலந்து வாழலாம். "நமக்கான வாழ்வியல் இறைஞானம்" நமக்கான வாழ்வில் நாம் வாழ்வோம். வாழ்க வளமுடன்...


🍃 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍃 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments