நித்தியக்கடன் ஜூன் 02 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 02


🏮🌸🏮🌸🏮🌸🏮🌸🏮🌸🏮


🧿 இன்றைய நித்தியக்கடன்


🧿 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🧿 இன்றைய சாதகம்


🧿 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🧿 இன்றைய நற்சிந்தனை

  

🧿 எங்கேயும், எப்போதும் இரு வேறுபட்ட தன்மை உடைய பொருள் ஒன்றையொன்று ஈர்க்கும் கவரும். ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் உணர்வும் இதே அடிப்படையில் ஆனதே. இந்த உணர்வுகள் இயற்கையில் ஒரு அங்கமாக இருந்தபோதும், இதனை ஒழுங்குபடுத்தி மேலும் சிறப்பு நிலையில், உயர்வதற்கான பிறவி தான் இந்த மனித இனம்.


🧿 இன்றைய தற்சோதனை


🧿 இந்த பூமியில் மனிதப் பிறவியினுடைய கடமையும் பொறுப்பும், மற்ற ஜீவராசிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது வேறுபட்டது. தன்னைத்தானே தற்சோதனைக்கு உட்படுத்திக் கொண்டு இதனுடைய ஆழ, அகல, நீளத்தை சரியாக உணர்ந்து அறிவை உயர்த்திக்கொண்டு வாழ்தே இறைஞான வாழ்வாகும்.


🧿 இன்றைய பண்புப்பயிற்சி


🧿 சூரிய வெப்பத்தால் உருகும் பனி போல, மனவளக்கலை பயிற்சி முறையாக செய்யும் போது நமக்குள் இருக்கக்கூடிய தீமைகளும், ஒழுங்கற்ற தன்மைகளும், உருகி நம்மில் இருந்து வெளியேறும். இதற்கான சரியான முயற்சி தான் தேவை. நாள் தவறாமல் இந்த இறைஞான பயிற்சியில் நம்மை இணைத்துக் கொண்டு, நம்முடைய அடுத்த தலைமுறைக்கான சஞ்சித கர்மத்தை ஞானமாய் விதைப்போம். வாழ்க வளமுடன்...


🧿 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🧿 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments