நித்தியக்கடன் ஜூன் 01 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூன் 01


🫐⚙️🫐⚙️🫐⚙️🫐⚙️🫐⚙️🫐


🍃 இன்றைய நித்தியக்கடன்


🍃 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍃 இன்றைய சாதகம்


🍃 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🍃 இன்றைய நற்சிந்தனை

  

🍃 ஒரு ஆறு தனக்கான வழித்தடத்தை உருவாக்கிக் கொண்டு கடலை சென்று சேர்கிறது. இது போன்றே மனிதனுக்குள் வழித்தடங்களை உருவாக்கிக் கொண்ட, விலங்கினப் பதிவுகள் இறை நிலையை நோக்கி சென்று அங்கே அது கரையட்டும். இதற்கான வழித்தடங்களை தயவு செய்து உருவாக்கி கொடுங்கள். இயல்பாகவே அதற்கான வழித்தடங்கள் அமைகிறது. ஆனால் உங்களுடைய போதிய ஒத்துழைப்பும், உதவியும் இல்லாத காரணத்தால் கீழ்க்கண்ட நிகழ்ச்சியாக அவை தன்மாற்றம் பெறுகிறது. உடலில் நோயாகவும், மனதில் குழப்பமாகவும், வாழ்க்கையில் சிக்கலாகவும் இந்த தீய வினைப் பதிவுகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இது "இயல்பூக்க நீதி" இதில் தவறொன்றும் கிடையாது.


🍃 இன்றைய தற்சோதனை


🍃 இயல்பான மனோநிலையில் மனவளக்கலை பயிற்சியை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த பயிற்சியின் விளைவு விலங்கினப்பதிவுகள் செல்வதற்கான வழித்தடங்களை தான் உருவாக்குகிறது. விளங்கினப்பதிவுகள் அவைகள் சென்று இறைநிலையோடு கலக்கட்டும். இறைவன் உங்களுக்குள் தான் இருக்கிறான், அவனை தேடி வெளியே அலைய வேண்டியதில்லை. விலங்கின பதிவுகளுக்கு விடுதலை கொடுங்கள். இறைவன் அங்கே தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வான். தற்சோதனைக்கு பின்னால் அமையக்கூடிய மிகச்சிறந்த விளைவு விலங்கின பதிவுகளுக்கு விடுதலை.


🍃 இன்றைய பண்புப்பயிற்சி


🍃 எதிர்பார்ப்பு இல்லாதபடி உங்களுடைய அனைத்து செயல்களையும் சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள். இதுவே விலங்கினப் பதிவுகளை தளர்த்தும் முறையாகும். விருப்பத்தோடும், கவனத்தோடும், எதிர்பார்ப்பு இல்லாமலும், ஆர்வத்தோடு பயிற்சியை செய்துபாருங்கள். விலங்கின பதிவை இறை நிலையை நோக்கி நகர விடுங்கள். போவதை போக்கிடும் இந்தப் பண்பில் காலத்துக்குக் காலம், நிமிடத்திற்கு நிமிடம் சிறந்து விளங்குவீர்கள். வாழ்க வளமுடன்...


🍃 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍃 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments