நித்தியக்கடன் மார்ச் 28 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 28


🔮☘️🔮☘️🔮☘️🔮☘️🔮☘️🔮


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍁 இன்றைய சாதகம்


🍁 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🍁 இன்றைய நற்சிந்தனை


🍁 பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் என்ற இந்த மூவகையான உடலுக்குள்ளும் அவரவர்கள் கருமைய தன்மைக்கு ஏற்ற களங்கமும் குறைபாடும் இருக்கிறது அவை என்னவென்றால் அணுச்சிதைவு ரத்த ஓட்டம் வெப்ப ஓட்டம் காற்றோட்டம் உயிரோட்டம் காந்த ஓட்டம் இவைகளில் ஏற்படக்கூடிய தடை தேக்கம் திசை மாற்றம் இந்த ஏற்றத்தாழ்வான இயக்கங்களை நாம் முறையாக சீரமைத்துக் கொள்ள வேண்டும். வேதாத்திரியம் அதன் முறையான பயிற்சி இந்த விளைவைத்தான் உருவாக்குகிறது. உங்களுடைய இயல்பான வாழ்க்கை எந்தவித இடையூறுமில்லாமல் சிறிது, சிறிதாக இப்பழுதுகள், குறைபாடுகள் நீக்கப்படும். இந்த உண்மையை உணரும் போது உண்மையான மகிழ்ச்சி, அமைதியும் உங்களுக்குள் பெருக்கெடுக்கும்.


🍁 இன்றைய தற்சோதனை


🍁 இறைவனுக்கு உலக உயிர்கள் மீது அன்பும், கருணையுமுண்டு. துன்பப்படாமல் பாதுகாப்பதில் மிகுந்த கவனத்தோடு இறைநீதி செயல் புரிகிறது. நாமாகவே நமக்கு துன்பம் ஏற்படும் செயல்களை அதிகமாக செய்துவிடுகிறோம். இறையாற்றலால் இதிலிருந்து நம்மை காப்பாற்ற முடியாத அளவிற்கு நாம் நம் தவறுகளுக்குள் பலமாக புதைத்து கொள்கிறோம். நம் தவறுகளை கண்டறிவதற்கு தற்சோதனை செய்து வேண்டும் நமக்கு உள்ளும் புறமுமாக தவறுகள் பல வகையிலும் பல நிலைகளிலும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது இவைகளை எல்லாம் கண்டறிந்து அவற்றை முறையாக ஒழுங்கமைப்பதற்கு சிறந்ததொரு மனப் பயிற்சியே தவமாகும் சிறுக, சிறுக அத்தவறுகளை விட்டு விலகுவோம்.


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 விட வேண்டியதை விட்டு விட்டால் நமக்குள் பெறுகவேண்டியது அங்கேயே இருக்கிறது. அது சிறப்பாக நல்ல நிலையோடு பெருகும். விட வேண்டியவைகள் இவைதான் பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், உணர்ச்சி வயப்படுதல், கவலை இவைகளே நாம் விட வேண்டியவைகள். விடவேண்டியதை விடுவோம் இந்தப் பண்பில் சிறந்து விளங்கும். வாழ்க வளமுடன்...


🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments