நித்தியக்கடன் மார்ச் 27 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 27


🕳️🎲🕳️🎲🕳️🎲🕳️🎲🕳️🎲🕳️


💥 இன்றைய நித்தியக்கடன்


💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💥 இன்றைய சாதகம்


💥 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


💥 இன்றைய நற்சிந்தனை


💥 ஒரு கல்லை சிற்பமாக வடிவமைப்பதற்கு அந்த கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகள் நீக்கப்படுகிறது. இதுபோல் ஞானநிலையை உருவாக்குவதற்கு மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை அகற்றப்பட வேண்டும். போதிய உடல் அசைவு இல்லாததாலும், போதிய மன இசைவு இல்லாததாலும், இன்று உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகிறது. உடலசைவும், மன இசைவும் இறை ஞானத்தை உருவாக்கும். மனதிற்கும், உயிருக்கும் ஏற்றார்போல உடலசைவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உயிருக்கு உகந்த முறையில் மனம் இசைவாக இயங்க வேண்டும்.


💥 இன்றைய தற்சோதனை


💥 எல்லாமும் எல்லா காலத்திலும் எல்லோருக்கும் தேவைப்படாது. தேவையான காலத்தில் தேவையானவற்றை அளவோடும், முறையோடும் உபயோகப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்கான முயற்சியை தான் முற்காலத்தில் பக்தி மார்க்கமாக முன்னோர்கள் வகுத்து கொடுத்திருக்கிறார்கள். தற்கால விஞ்ஞான வளர்ச்சியால் பக்திமார்க்கம் மட்டும் போதாது ஞானமார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விளக்கத்தோடு வாழவேண்டிய  அவசியமும், தேவையும் உருவாகியிருக்கிறது.


💥 இன்றைய பண்புப்பயிற்சி


💥 மனதில் இருந்தும், நாவிலிருந்தும் புறப்படும் எதுவும் நல்ல பண்போடு உள்ளதாக அமைத்துக் கொள்ளவேண்டும். இறை ஞானத்தில்  உயர்வதற்கான வழிமுறைகளை இந்த அளவீட்டு முறை கொண்டு முறை படுத்திக் கொள்ளலாம். அவை தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்ப உணர்வுகள் எழாத வண்ணம். அவரவர் தம் எண்ணம், சொல், செயல் இவைகளை பயன்படுத்தி பயண்காண்பதே யோக சாதனை "ஞானமார்க்கம்" வாழ்க வளமுடன்...


💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments