நித்தியக்கடன் மார்ச் 23 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 23


⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍁 இன்றைய சாதகம்


🍁 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🍁 இன்றைய நற்சிந்தனை


🍁 மனம் தங்கி இயங்க கூடிய இடம் மூளையாக இருந்த போதும், அந்த மூளையினுடைய ஆளுமை திறமைக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப இந்த பிரபஞ்சம் முழுவதிலும் விரிந்து, நிலைத்து, சுருங்கி மனதினால் இயங்க முடியும். ''எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம்'' இந்த வாசகத்துக்கு ஏற்ப அளவிடமுடியாத ஆற்றல்மிக்க மனதுக்கு, மனித மூளை செல்கள் தான் பிரதானம். மூளை செல்களினுடைய சீர் இயக்கத்திற்கும், ஆற்றலுக்கும், காந்த தீவுக்கும் ஏற்ப அளவிடமுடியாத சக்தி மிக்கது மனம்.


🍁 இன்றைய தற்சோதனை


🍁 மூளை செல்களினுடைய ஆற்றலையும், திறமையையும் பலப்படுத்தக்கூடிய முறையான பயிற்சி தான் மனவளக்கலை (குண்டலினி யோகம்). இப்பயிற்சி மூலமாக மூளை செல்களினுடைய திறமையை, ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த மனிதப் பிறவியினுடைய நோக்கமும் இதுவேதான். தன்னார்வத்தோடு தன்னை யார் இந்த யோகப் பயிற்சிக்கு, அர்ப்பணித்து கொள்கிறாரோ அவரே யோக சாதனையாளர். தற்சோதனை படிப்படியாக உங்களை தகவமைக்கும். அந்த தகவமைப்புக்கு உங்களுக்குள் நீங்கள் இடம் கொடுத்தால் போதும், தன்னிலை விளக்கத்தோடு தன்னை தானே உணர முடியும்.


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்திலும் அளவு முறையை பின்பற்றும் போதும், குணநல பேற்றில் முழுமை பெறும் போதும் மூளை செல்கள் பலப்படுகிறது. நீயூரான் செல்கள் பிரபஞ்ச காந்த சக்தியோடு இணைந்து இயங்குவதற்கான வாய்ப்பினை பெறுகிறது. நல்லதோர் பண்புதான் இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. தேவையற்ற பழக்க வழக்கங்களை தவிர்த்து மெய்ஞான சிந்தனையோடு வாழ்வில் உயர்வு காண்போம் வாழ்க வளமுடன்...


🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments