நித்தியக்கடன் ஏப்ரல் 20 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 20


⭕🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️⭕


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை


🎲 ஒரு பலூனில் காற்றை அளவுக்கு மீறி நிறப்பும் போது அந்த பலூனுடைய எந்தப்பகுதி பலவீனமாக இருக்கிறதோ அந்தப் பகுதியே வெடிக்கிறது. இதுபோல  நம்முடைய பழக்க வழக்கங்கள் எவற்றில் நாம்  பலவீனமாக இருக்கிறோமோ அதன் மூலமாகவே நாம் துன்பத்தை அனுபவிக்கின்றோம். அதன் மூலமாகவே நம் மனதில் குழப்பமும் வாழ்க்கையில் சிக்கலும் உடலில் நோய்யும் ஏற்படுகிறது ஆகவே இந்த பலவீனமான பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை சீர்திருத்தம் செய்து கொண்டு அவைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 முதலில் பலவீனமான பழக்கவழக்கங்களை கண்டறிய வேண்டும். அவற்றை முறையான பயிற்சி மூலம் சிறுக சிறுக மாற்றியமைக்க வேண்டும். நாம் ஏகபோகமாக ஆதரவு கொடுத்து இந்த தேவையில்லாத பழக்கவழக்கங்களை நமக்குள் தாராளமாக வளரவிட்டு இருக்கிறோம். இதன் விளைவாக நாம் அதற்கு முழுமையாக அடிமையாகி விட்டோம். தெரிந்தோ தெரியாமலோ இவைகள் தான் நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றன. மேலும் இந்தப் பிழை நிகழாமல் இருப்பதற்கு பலமான பயிற்சியும், முயற்சியும், தற்சோதனையும் செய்து அவற்றிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்ள வேண்டும்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 சரியானதொரு வழிப்பாதையை கிடைக்கும் வரை இது மிகுந்த சிரமமாகவே இருக்கும். இருந்த போதிலும் நாம் இப்படித்தான் வாழ வேண்டும். பிழைகள் நிறைந்த செயல்களோடும்,  எண்ணங்களோடும் நம் வாழ்க்கையை எப்போதும் அமைதியாக நிறைவாக வாழ முடியாது. பிழைகளிலிருந்து மீள்வதற்கு முயற்சியும் நல்ல பண்புகளையும் வளர்த்து கொள்வது நல்ல புத்தகங்களை வாசித்தும், நல்லோர் வார்த்தைகளை மீண்டும், மீண்டும் கேட்பதும் நல்ல பயிற்சிகளோடு எப்போதும்  இணைந்திருந்தும் அதனை பின்பற்றி உயர்வு பெற வேண்டும் இதுவே மனிதப் பண்பாகும். மனிதன் எப்போதும் மனிதனாக இருக்க வேண்டுமானால் இந்தப் பண்பு மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வாழ்க வளமுடன்...


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments