நித்தியக்கடன் ஏப்ரல் 14 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 14


⭕🎆⭕🎆⭕🎆⭕🎆⭕🎆⭕


♦️ இன்றைய நித்தியக்கடன்


♦️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♦️ இன்றைய சாதகம்


♦️ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம். 


♦️ இன்றைய நற்சிந்தனை


♦️ தன்னுடைய உடல், அறிவு, உயிர், மனம் இவைகளை யார்   மதிப்போடு நடத்துகிறாரோ, அவரால்தான் மற்றவர்களை  மதிப்போடு நடத்தமுடியும். தன்னை போலத்தான் பிறரையும் எண்ணுவார்கள். தான் எப்படியோ அது போலத்தான் மற்றவர்களும், என்று சிந்திக்கும் சிந்தனை உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிற உண்மையாகும்.


♦️ இன்றைய தற்சோதனை


♦️ நீங்கள் இதை விரிவாக தற்சோதனை செய்து பாருங்கள். மற்றவர்களைப் பற்றிய உங்களுடைய சிந்தனையும் பார்வையும் எப்படி அமைகிறது, என்றால் அது உங்களுடைய தன்மை தரம் இதைப் பொறுத்தே அமைகிறது. இதிலிருந்து மீறியோ மாறி எவரொருவரையும், பற்றி உங்களால் சிந்திக்கவோ அனுமானிக்கவோ முடியாது.


♦️ இன்றைய பண்புப்பயிற்சி


♦️ தன்னைத்தானே உணர்தல், தன் நிறை குறையை அறிந்து கொள்ளுதல், அறிந்து கொண்ட வகையில் திருத்தங்களுக்கு வழிவகுத்தல், வகுத்த வழியே வாழ்ந்து காட்டுதல். இந்த பண்பில் அனைவரும் தன்னை உயர்த்திக் கொள்ளும் போது மறைபொருளாக உள்ள அனைத்து நிலைகளும் உணர்வாக அனுபவமாக அவருக்குள் முளைத்தெழும். வாழ்க வளமுடன்...


♦️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♦️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸

Comments