வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 13
♾️💢♾️💢♾️💢♾️💢♾️💢♾️
🔶 இன்றைய நித்தியக்கடன்
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 இன்றைய சாதகம்
🔶 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🔶 இன்றைய நற்சிந்தனை
🔶 மனதில் பல்வேறு எண்ணங்கள் எழுகின்றன. அந்த எண்ணங்களெல்லாம் நம்மை அதனுடைய விருப்பத்திற்கு அழைத்துச் செல்லும், சில சமயம் இழுத்துச் செல்லும், சில சமயம் வா! என்று அன்போடு வரவேற்கும். எண்ணங்கள் எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு எந்த எண்ணம் நமக்கு பொருத்தமானது என்று, எதிர்கால விளைவை கணித்துக் கொண்டு இந்த எண்ணங்களை தேர்வு செய்து அவைகளுக்கு மட்டுமே செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
🔶 இன்றைய தற்சோதனை
🔶 நாம் பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்களையும் தூய்மையை ஏற்படுத்தி கொள்ளும் வரை, இந்த எண்ணங்களின் திருவிளையாடல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். சரியாக தற்சோதனை செய்து எப்படி எல்லாம் நம்மை திசை திருப்புகிறது நம்மை மயக்குகிறது என்று, ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மை நாம் கண்காணிப்பில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கண்காணிப்பு வளையத்துக்குள் நாம் இல்லை என்றால் இந்த எண்ணத் திருவிளையாடல்கள் இருந்து மீள்வது மிகவும் கடினமாகும்.
🔶 இன்றைய பண்புப்பயிற்சி
🔶 உயிரின் மதிப்பை இயற்கையின் மதிப்பை நம் மனதை கொண்டு தான் உணர முடியும். இதனைத் தொடர்ந்து மற்ற எல்லா வகையான பதிப்புகளையும் உணர்வதற்கான ஒரு பாலமாக நம் மனமே இருந்து செயல்படுகிறது. இப்படிப்பட்ட மனம் தூய்மையாக இருந்தால்தான் மதிப்போடு இருந்தால்தான் மற்ற மதிப்பையும் உணர முடியும். நம்முடைய மனமானது மதிப்பை இழந்து இயங்கினால் மற்ற எந்த ஒரு மதிப்பையும் நம்மால் உணர முடியாது. நீரோடு நீர் சேரும், எண்ணெய்யோடு எண்ணெய் சேரும். நம் மனதின் தன்மை எதுவோ அதுவே நம்முடைய நம் வாழ்க்கையினுடைய தன்மையுமாகும். வாழ்க வளமுடன்...
🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment