வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 12
🎲💥🎲💥🎲💥🎲💥🎲💥🎲
🌐 இன்றைய நித்தியக்கடன்
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌐 இன்றைய சாதகம்
🌐 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🌐 இன்றைய நற்சிந்தனை
🌐 மனித உடல்களில் பொதுவாக செல்கள் நான்கு வகையான வேலைகளை செய்கின்றன. அவைமுறையாக 1, வளர்ச்சி அடைதல், 2, இனப்பெருக்கம் செய்தல், 3, சத்துப் பொருள்களை ஆற்றலாக மாற்றுதல், 4, தூண்டு வினைக்கு பதில் வினை செய்தல். கருவில் உருவான நாள் முதற்கொண்டு இந்த செயல்பாடுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த செல்களினுடைய இயக்கத்திற்கு ஓஜஸ் என்ற சுத்த சக்தி தேவைப்படுகிறது.
🌐 இன்றைய தற்சோதனை
🌐 இந்த சக்தி ஏற்கனவே நமக்குள் உற்பத்தி ஆனாலும், அது நம்முடலுக்கு தேவையான அளவில் உற்பத்தியாவது இல்லை. இந்த சக்தியை முறையான பயிற்சி மூலமாக போதிய அளவு உற்பத்தி செய்துகொள்ள முடியும். தவம், தற்சோதனை, உடற்பயிற்சி, காயகல்பம் இவைகளில் முறையாக நாம் நம்மை (தன்னார்வத் தோடு) ஈடுபடுத்திக் கொள்ளும் போது, ஓஜஸ் ஆற்றல் தேவையான அளவிலும் முறையிலும் அந்தந்த கால நிலைக்கேற்ப, உடலுக்குள் உற்பத்தியாகிறது. பயிற்சிகளைதொடர்ந்து செய்யும் போது இதை நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள்.
🌐 இன்றைய பண்புப்பயிற்சி
🌐 எந்த ஒரு செயல்பாட்டிலும் நம்மை இணைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு விளைவு என்பது கட்டாயமாக உண்டு. அந்த விளைவு எப்படி உருவாகிறது, அந்த விளைவை சிறப்பான முறையில் எப்படி உருவாக்கிக் கொள்ளலாம், என்று ஆராய்ச்சி மேற்கொள்ளுங்கள். இந்த ஆய்வுமனப்பான்மை நம்மை நமக்குள் மெதுவாக அழைத்துச் செல்லும். நம்மை நமக்கு அறிமுகம் செய்யும். எங்கேயும் எப்பேதும் அவசரப்பட்டு விடாதீர்கள். இறைநிலையோடு எண்ணத்தை கலக்க விட்டு, ஏற்படும் ஓர் அமைதியிலே அறிவு விழிப்பாய் நிற்க, நிறை நிலையே தானாக உணர்வதாகும். வேதாத்திரி மகரிஷி. வாழ்க வளமுடன்...
🌐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment