வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 08
🌀🌸🌀🌸🌀🌸🌀🌸🌀🌸🌀
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 ஒரு புல்லாங்குழல் இல் இருந்து வெளியேறும் காற்று இசையாக மாறுகிறது. ஒரு பூந்தோட்டத்துக்குள் நுழைந்து வெளிவரும் காற்று நறுமணமாய் வீசுகின்றது. இது போலத்தான் நம் மனம் எதனோடு இணைகிறதோ அதனுடைய தன்மையாக மாறுகிறது. சூரியனோடு இணையும் போது சூரியதன்மை. சந்திரனோடு இணையும் போது சந்திரதன்மை. இறைநிலையோடு இணையும்போது இறைத்தன்மையாய் மனம் மாறுகிறது.
🔰 இன்றைய தற்சோதனை
🔰 இந்த மாற்றங்கள் அனைத்தும் இறை நீதியாக இருந்து செயல்படுகிறது. இதை தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு நாம் பல்வேறு வகையில் சிந்தனையை சீர்திருத்தத்தை எல்லா வகையான சிக்கனத்தையும் கடைபிடிக்க வேண்டும். உருவ, அருபகோட்பாடுகளை தெளிவாக உணர்வதற்கு தற்சோதனை தான் சிறந்த வழிமுறையாக அமைகிறது. உங்களை நீங்களே சீர் திருத்திக் கொள்ளுங்கள். சீவகாந்த செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 அமைதியான தெளிவான மனதால் தான் உருவத்தில் இயங்கும் இயக்கத்தையும், உருவம் இல்லாமல் இயங்கும் இயக்கத்தையும், சிறப்பாக உணர்ந்து தெளிவு பெற முடியும். இந்த தெளிவு நம் வாழ்வில் எல்லா வகையான வெற்றியையும், மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரவல்லது. இந்த அமைதியாக சிந்திக்கும் பண்பை வளர்த்துக் கொண்டு சிறப்பாக செயல் செய்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment