வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஏப்ரல் 07
🍁🎱🍁🎱🍁🎱🍁🎱🍁🎱🍁
💐 இன்றைய நித்தியக்கடன்
💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💐 இன்றைய சாதகம்
💐 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
💐 இன்றைய நற்சிந்தனை
💐 தன்னுடைய பணத்தையும், அதை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டையும், அதனை சார்ந்த மற்றவர்களையும், நிர்வாகம் செய்து, தன்னை முன்னிறுத்தி, மற்றவர்களை வழி நடத்தக்கூடிய திறமையை மேம்படுத்திக் கொள்ளும் ஆளுமை பயிற்சி, தலைமை பயிற்சி, தொழில் பயிற்சி இவைகளில் எல்லாம் கவனம் செலுத்தி தன்னை வளர்த்துக் கொள்ளும், அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். இதனோடு சேர்த்து இன்னும் சில பயிற்சிகளை எடுத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பனதாக அமையும்.
💐 இன்றைய தற்சோதனை
💐 ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதை இயக்குவதும் அதற்கான செயல் திட்டங்களை வடிவமைத்து, அதன் கீழ் மற்றவர்களை வழி நடத்துவதும், சாதாரணமாக எல்லோருக்கும் அமைந்து விடாது. சொந்த தனி முயற்சியும் சமுதாயத்தைப் பற்றிய சில ஆய்வுகளும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இது மாதிரியான திறமைகளை வளர்த்துக் கொள்ள எல்லோரும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான சரியான வாய்ப்பை அவரவர்களுக்குள்ளாக இருக்கும் கருவமைப்பு தன்மை, பேரறிவு உருவாக்கி தரும்.
💐 இன்றைய பண்புப்பயிற்சி
💐 விதையாக நாம் இருக்கும் வரை இந்த மண்ணுலகில் வேறு யாருக்கும் நம்மை அடையாளம் தெரியாது. முளைத்து எழவேண்டிய முயற்சியை நாம் தான் செய்து கொள்ள வேண்டும். நம்முடைய இந்த முயற்சிக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைக்கப்பட்டது தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை யாவும். யாவரும் இதை பயன்படுத்தி உலக அமைதி உருவாக நமக்குள்ளிருந்து உழைப்போம் உயர்வோம். வாழ்க வளமுடன்...
💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment