நித்தியக்கடன் ஏப்ரல் 02 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஏப்ரல் 02


🔶❄️🔶❄️🔶❄️🔶❄️🔶❄️🔶


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை


🎲 எத்தனையோ பழங்கள் இருக்கும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் துரியாதீத தீட்சை பெற்ற அன்பர்களுக்கு ஞான கனியாக ஏன் வாழைப்பழத்தை வழங்குகிறார்கள்? என்றால்... வாழைமரத்தில் வாழைப்பூவாக இருக்கும்போது அந்தப் பூ கீழ்நோக்கி இருக்கும் அது காயாகி கனியாக மாறும் போது மேல்நோக்கு தன்மைக்கு மாறிவிடும். கீழ்நோக்கு தன்மையோடு வந்து மேல்நோக்கு தன்மைக்கு மாறக் கூடிய சிறப்பு, இந்த வாழைப்பழத்திற்கு இருப்பதனால் ஆசான் அவர்கள் இதை ஞானக் கனியாக தேர்ந்தெடுத்து, துரியாதீத தீட்சையின் போது அன்பர்களுக்கு அன்போடு வழங்குகிறார்கள்.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 இந்த வாழைப்பழம் போல நாமும் கீழ்நோக்கு தன்மையோடு பிறந்து மேல்நோக்கு தன்மைக்கு உயர்வு பெற வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவதற்கு இந்த துரியாதீத தவம் பேருதவியாக இருக்கும். அது மட்டுமின்றி கூடவே அதனோடு இணைந்து வழங்கப்படும் இந்த ஞானக்கனியும் அதற்கு உதவியாக அமையட்டும் என்ற, ஆழ்ந்த விஞ்ஞான சிந்தனையோடு இந்த மெய்ஞான கனியை அருள் நிலையோடு வழங்குகிறார்கள். இதை நன்கு தற்சோதனை செய்து புரிதலை ஏற்படுத்திக் கொண்டு முயற்சிப்போம்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 இந்த வாழைப்பழம் எப்படி மேல்நோக்கு தன்மையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, கனியாகி தனக்கும் தன்னை சார்ந்த மற்ற ஜீவன்களுக்கும் பயன்பாடாக அமைந்ததோ, அது போல நாமும் ஞானத்தை உணரக்கூடிய தன்மையில் உருவாக்கப் பட்டிருக்கிறோம். இதை சிறந்த முறையில் பயிற்சி மூலமாக முயற்சித்து, மேலும் ஞான தன்மையில் நிறைவான ஒரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி நாமும் நம் குடும்பமும் தழைப்போமாக. வாழ்க வளமுடன்...


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments