நித்தியக்கடன் பிப்ரவரி 24 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 24


🔮♦️🔮♦️🔮♦️🔮♦️🔮♦️🔮


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔰 இன்றைய சாதகம்


🔰 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை


🔰 எதை எண்ணுகின்றோமோ நாம் அதுவாகி விடுகிறோம், எதை புரிந்து வைத்திருக்கிறோமோ, அதுவே வாழ்க்கையாக மலர்கிறது, அனுபவமே வாழ்க்கை. அனுபவத்தை தாண்டி, புரிதலை தாண்டி, எண்ணத்தை தாண்டி எதுவுமே கிடையாது. இறைவனை எண்ணும்போது இறைத் தன்மை பெருகும். நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்ந்து, மன்னிப்பு இவையெல்லாம் இறைத் தன்மையாகும். இதுவே மனிதன் வாழவேண்டிய குணங்களுமாகும். இவை அல்லாது. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகளை எண்ணும்போது  விலங்கினத் தன்மை பெருகும்.


🔰 இன்றைய தற்சோதனை


🔰 எண்ணமே நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறாக இயங்கும் எண்ணத்தில் விலங்கின பதிவுகளுக்கு இடம் கொடுத்தால்  பல்வேறுபட்ட உடல் நோய்களையும், மனநோய்களையும் சந்திக்க நேரிடும். மனிதனுடைய கருமையம் விளைங்கினப் பதிவுகளை நீக்கி கொள்வதற்காகவே தன்மாற்றம் பெற்று வந்துள்ளது. இந்த கருமையத்திற்கு பொருந்தாத விலங்கின பதிவை ஊக்குவிக்காமல் நல்ல சிந்தனையோடு குணநலப் பேற்றில் உயர்வு பெற, எண்ணத்தை ஆராய்ந்து, தற்சோதனை செய்து ஒழுங்கு செய்வீர்.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 எண்ணங்களை வைத்துதான் இந்த பிரபஞ்சமே தன்மாற்றம் அடைந்திருக்கிறது. இறைவனுடைய எண்ணமே அறிவாக செயல்பட்டு இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. இறைவனின் திட்டமிட்ட அற்புதமான தன்மாற்றம் மனிதஇனம். மனிதர்களிடமே இறைநிலையை, தன்னுடைய மூலத்தை உணர்ந்து கொள்ள கூடிய சிறப்பான வாய்ப்பு அமைந்திருக்கிறது. இத்தகைய சிறப்பில் வாழ்ந்து இறைநிலையை உணரும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments