நித்தியக்கடன் பிப்ரவரி 21 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

பிப்ரவரி 21


🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️


🏮 இன்றைய நித்தியக்கடன்


🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏮 இன்றைய சாதகம்


🏮 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🏮 இன்றைய நற்சிந்தனை


🏮 இந்த பிரபஞ்ச இயக்கம் முழுவதும் அணுக்களின் கூட்டு இயக்கமே. இதில் அணு சேர்க்கை, அணு சிதைவு இதை அடிப்படையாகக் கொண்டே இந்த பிரபஞ்சத்திற்குமம், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் இந்த இயக்க நீதி பொறுந்தும். இதில் முறையான மனப் பயிற்சியை மேற்கொள்ளும் போது மனிதர்களால் அணுச்சேர்க்கையை, அணுச்சிதைவை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். இது இயற்கைக்கு முரண்பாடானது கிடையாது இயற்கையோடு இணைந்து வாழ்வது.


🏮 இன்றைய தற்சோதனை


🏮 இந்த பூமியிலும், பிரபஞ்சத்திலும், நமக்குள்ளாகவும் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கு பின்னால். ஒரு விஞ்ஞான பூர்வமான உண்மை இருக்கிறது அந்த உண்மையை அனுபவமாக்கிக் கொள்ள வேண்டுமானால். எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து அதனுடைய விஞ்ஞானத்தை உணர்ந்து தெளிவு பெற வேண்டும். தற்சோதனை தன்னை தானே உயர்த்திக்கொள்ளும் சிறந்த வழிமுறையாகும்.


🏮 இன்றைய பண்புப்பயிற்சி


🏮 உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொண்டு, உணர்ந்த நிலையில் வாழும் பண்பில் உயர்வு காண வேண்டும். இந்த முயற்சி தான் அணு சிதைவை மாற்றியமைக்கக்கூடிய பயிற்சி முறை. எந்த ஒன்றையும் மாற்றி புரிந்துகொண்டு தவறான செயல்களில் சிக்கிக் கொள்ளாமல் சரியாக எதையும் உணர்ந்து, தெளிந்து வாழும் பண்பில் உயர்வு பெறுவோம். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து உணர்ந்தவாறே வாழ்வை வாழ்வோம் வாழ்க வளமுடன்...


🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments