நித்தியக்கடன் மார்ச் 20 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 20


🏮🍥🏮🍥🏮🍥🏮🍥🏮🍥🏮


🎱 இன்றைய நித்தியக்கடன்


🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎱 இன்றைய சாதகம்


🎱 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🎱 இன்றைய நற்சிந்தனை


🎱 "பலவாறான நினைவகற்றி பார்க்க உன்னுள் ஆழ்ந்து விட்டேன்" வேதாத்திரி மகரிஷியினுடைய இந்த வார்த்தை நமக்கு அனுபவமாக நிச்சயமாக கிட்டும். அதற்கு நாம் நம்மை பலவகையிலும் முறையிலும் தயார்படுத்த வேண்டும். தியானம் செய்து கொண்டே தயாராகவேண்டும், உடற்பயிற்சி செய்து கொண்டே தயாராகவேண்டும், காயகல்பம் செய்து கொண்டே தயாராகவேண்டும், தற்சோதனை செய்து கொண்டே தயாராக வேண்டும். எந்தெந்த வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றதோ அத்தனை வாய்ப்புகளையும் துல்லியமாக பயன்படுத்தி தயாராக வேண்டும்.


🎱 இன்றைய தற்சோதனை


🎱 உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தின் வழியாகவும் நம்மை தயார்படுத்தியாகவேண்டும். இவைகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய முறைதான் ஞானத்தை நமக்குள் முளைக்கச் செய்யும். ஞானம் நமக்குள் விதையாக உயிரில் அடக்கமாக இருக்கிறது. அதனை வளர்ப்பதற்கு போதிய வளம் உடலிலும், உயிரிலும், மனதிலும் தயாராகவேண்டும். ஒரு நிலத்தை செம்மைப் படுத்துவது போல நாம்  உடலால், உயிரால், மனதால் ஞானத்தை வளர்க்க தயாராக வேண்டும்.


🎱 இன்றைய பண்புப்பயிற்சி


🎱 பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையை ஏன் பிறந்தோம்? எதற்காக பிறந்தோம்? நம்முடைய வாழ்க்கை என்னுடைய நோக்கம் என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நம்முடைய தேவைகளை முறைப்படுத்திக் கொண்டு, முறை தவறிய பழக்கவழக்கங்களை எல்லாம் படிப்படியாக குறைத்து சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் என்ற முறையில் சிறப்பாக உயர்ந்து ஓங்கி வாழ வேண்டும். நாமும் நம் குடும்பமும் வாழ்க வளமுடன்...


🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments