வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 19
🎯☘️🎯☘️🎯☘️🎯☘️🎯☘️🎯
♾️ இன்றைய நித்தியக்கடன்
♾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♾️ இன்றைய சாதகம்
♾️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
♾️ இன்றைய நற்சிந்தனை
♾️ உங்களிடம் 10 கிராம் எடை கொண்ட காந்தத் துண்டுகள் மூன்று இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது அந்த காந்தத் துண்டுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான ஈர்ப்பு விசை இருப்பதாக வைத்துக் கொள்ளவோம். ஒரு துண்டிற்கு 10 சதவீதமும், மற்றொன்றிற்கு 50 சதவீதமும், மீதமுள்ளதற்கு 100 சதவீதமும் இருக்கிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அது அதனுடைய ஈர்ப்பு விசைக்கு தகுந்தாற்போல இரும்பு துகள்களை ஈர்க்கும். இந்த விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு, எப்படி ஈர்க்கும் தன்மை அமைகிறதோ அதுபோலவே நம் உடலில் உள்ள ஏழு மையங்களும் ஈர்க்கிறது.
♾️ இன்றைய தற்சோதனை
♾️ இப்போது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய ஏழு மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை, துரியம் மையங்களை யாவும் தூய்மை பெற பெற ஈர்ப்பு விசை அதிகரிக்கும். இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த அந்த மையங்களில் தவம், தற்சோதனை. இந்த ஏழு ஆதாரங்களுக்கும் எந்த அளவு காந்தத்திணிவோடும் ஈர்ப்பு தன்மையோடும் இருக்கிறதோ, அந்த அளவு நம்முடைய உடல், உயிர், மனம், அறிவு இவை யாவும் நல்ல நிலையில் வளமாக இயங்கும் என்பதுதான் உண்மை. இந்த உண்மைகளை எல்லாம் தற்சோதனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
♾️ இன்றைய பண்புப்பயிற்சி
♾️ நம்முடைய ஒவ்வொரு மையங்களுக்கும் காந்தத் திணிவு ஏற்பட வேண்டுமானால் முறையான உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த மையங்கள் தூய்மையாக இருந்து இயங்கும் படியான வாய்ப்புகளை, அந்தந்த மையங்களுக்கு நாம் தான் உருவாக்கி தர வேண்டும். இந்த பொறுப்பும் கடமையும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. இந்த பொதுவான உண்மையை உளமாற ஏற்று, வளமோடு, நாமும் நம் குடும்பமும் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
♾️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♾️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment