வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 16
💠♨️💠♨️💠♨️💠♨️💠♨️💠
☘️ இன்றைய நித்தியக்கடன்
☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
☘️ இன்றைய சாதகம்
☘️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
☘️ இன்றைய நற்சிந்தனை
☘️ மனமாகப்பட்டது எதனோடு வேண்டுமானாலும் இணைந்து இயங்கும். எதுவாக வேண்டுமானாலும் மாறி நின்று இயங்கும் மனதிற்கென்று தனியாக அறிவியக்க முறையோ அமைப்போ கிடையாது. மனிதனுடைய பொறுப்பும் கடமையும் மனதை அறிவோடு இணைத்து விடுவதாகும். இந்த இணைப்பை ஏற்படுத்துவதற்காக மனிதனுக்கு வழங்கப்பட்ட, மிகச்சிறந்த வாய்ப்பினைத் தான் வாழ்க்கை என்று சொல்கின்றோம். மனதின் மதிப்பு என்ன என்பதை மனம் அறிய வேண்டுமானால் விலங்கின பதிவு சார்ந்த அறிவில் செயல்படக்கூடிய மனதின் தன்மையிலிருந்து மாற்று வழி முறையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
☘️ இன்றைய தற்சோதனை
☘️ இந்த வாழ்க்கை முறையில் குண்டலினி யோகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போது மனமும் அறிவும் ஒன்றை ஒன்று சந்திக்கிறது. இவ்விரண்டுக்குமான நட்பும், ஒருங்கிணைப்பும், அரவணைப்பும் "அருள்" என்ற பதமான தன்மையை பெறுகிறது. முரண்பாடான சிந்தனைகளும் செயல்களும் இயற்கைக்கு பொருந்தாத, வாழ்வியல் அமைப்புக்கும், மனதுக்கும், அறிவுக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது. உடலில் நோயாகவும், மனதில் குழப்பமாகவும், வாழ்க்கையில் சிக்கலாகவும் இதைத்தான் உணர்கின்றோம்.
☘️ இன்றைய பண்புப்பயிற்சி
☘️ ஏதோ ஒரு பக்கம் தவறு செய்து விட்டாலோ, அல்லது தன்னுடைய கடமையில் இருந்து விலகினாலும், அதனுடைய பாதிப்பு ஏதோ ஒரு பக்கத்தில் நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலித்து, நாம் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பமாகவும், சூழ்நிலையாகவும், மீண்டும் மீண்டும் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். திருத்தங்கள் ஏற்படாத வரை, சீர்திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளாத வரை, உடலும் மனமும் மீண்டும் மீண்டும் குழப்பங்களுக்குள் உழன்று கொண்டே தான் இருக்கும். வாழ்க வளமுடன்...
☘️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
☘️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment