வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 15
⛳🕳️⛳🕳️⛳🕳️⛳🕳️⛳🕳️⛳
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 சதுரம், வட்டம், கோணம், நீள்வட்டம், நீள்சதுரம் இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணக்கிடுகள். இதனுடைய அளவீடுகள் என்பது ஒவ்வொன்றிற்கும் மாறுபடுகிறது. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான கோட்பாடு கிடையாது. இதே போல் தான் நம்முடைய பருவுடல், நுண்ணுடல், காந்தஉடல் இந்த மூன்றுக்கும் அறக்கோட்பாடு வேறு வேறாகும். இருந்தபோதும் இவை மூன்றும் ஒன்றிணைந்து, மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை ஒன்று அரவணைத்து, ஒன்றை ஒன்று பராமரித்து, ஒன்றை ஒன்று பாதுகாத்து இயக்கப்பட வேண்டியது, மிகவும் முக்கியமானதாகும்.
💠 இன்றைய தற்சோதனை
💠 பருவுடல், நுண்ணுடல், காந்தஉடல் வந்தவுடன் இந்த மூன்று உடலும் ஒன்றால், ஒன்று மேன்மை பெறவும் சீர்குலையும் வாய்ப்புகள் அதிகம். மூன்றுக்கும் விதிமுறைகளை நாம் தெளிவாக தெரிந்து உணர்ந்து அதற்கு தகுந்தார் போல, நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த விதிமுறைகள் தெரியாமல் நாம் முறை தவறி நடந்து கொள்ளும் போதெல்லாம், உடலால் மனதால் துன்பத்தை சந்திக்க நேரிடுகிறது, என்ற உண்மையை மறந்து விடக்கூடாது. பொதுவான உண்மை என்றும், குறிப்பிட்ட அதற்கென்று உள்ள உண்மை என்றும், உண்மை இரு வேறுபட்ட நிலைகளில் இயங்குகிறது.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 இந்த மூன்று உடலுக்கான பயிற்சிகளையும் சரியான முறையிலும் அளவிலும், கடைபிடித்து காலத்தால் இதற்கும் நமக்குமான இணக்கத்தன்மை, நட்பு மேன்மை, என ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்க கூடிய வாய்ப்புகள் எப்போதும், நாம் அவைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். அப்போது தான் மீண்டும் அது நம்மை பாதுகாக்கும், பராமரிக்கும், வாழ்க்கை இனிமையாக, அமைதியாக அமையும். இயற்கைக்கும் நமக்கும் இடையே உள்ள இனிமையை காத்துக்கொள்வது, மனிதர்களாகிய நம்முடைய தலையாய கடமையாகும். வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment