வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 14
♾️🚥♾️🚥♾️🚥♾️🚥♾️🚥♾️
🌐 இன்றைய நித்தியக்கடன்
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌐 இன்றைய சாதகம்
🌐 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌐 இன்றைய நற்சிந்தனை
🌐 எதற்காக தற்சோதனை செய்ய வேண்டும்..? சோதனை எந்த வகையிலெல்லாம் நமக்கு பயன்படுகிறது..? எந்த ஒன்றை நாம் சிந்தித்தாலும் நம்முடைய மனதுக்கும் அதற்கும் ஒரு உயிர் கலப்பு ஏற்படுகிறது, இந்த உயிர் கலப்பு நம் உடலுக்கும் இந்த பிரபஞ்ச நிலைக்கும் இடையே ஒரு இணக்கத் தன்மையை ஏற்படுத்தும். இந்த இணக்கத்தன்மை நம் அறிவின் வழியாக நம்முடைய ஐயப்பாடுகள் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் அடிப்படை ஆற்றலாகும். இந்தத் தன்மை நமக்குள் எந்த அளவுக்கு பல்கி பெருகி இருக்கிறதோ, அந்த அளவு தான் நமக்கு அறிவில் தெளிவும் ஞானமும்.
🌐 கண்களை மூடிக் கொண்டு ஒரு மேடு பள்ளமான அல்லது படிக்கட்டுகளில் நடக்கின்றோம் என்றால். நம்முடைய நிலை எப்படி இருக்கும். அதுபோலத்தான் தற்சோதனை இல்லாமல் வாழும் வாழ்க்கை எப்போதும் அச்சத்தோடும், சந்தேகத்தோடும் எல்லா சூழ்நிலைகளையும் எதிர் கொள்ள வேண்டியவரும். ஆராய்ச்சி, தெளிவு, முடிவு இது மனிதர்களின் மிகச்சிறந்த மனோபலம், இந்த ஆராய்ச்சி, தெளிவு, முடிவு இவைகளில் தற்சோதனை வழியாகத்தான் நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள முடியும்.
🌐 இன்றைய பண்புப்பயிற்சி
🌐 மனித இனத்திற்கான மிகச் சிறந்த பண்பு சிந்தனை, மனிதர்கள் என்று சிந்திக்கத் தொடங்கினார்களோ அன்றுதான் மனிதர்கள் பலவிதமான பொருட்களை உருவாக்க முடிந்தது. இந்த சிந்தனையின் வழியாகத்தான் நாம் விஞ்ஞானத்தில் வளர்ந்திருக்கிறோம், இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய அனைத்து விஞ்ஞான கருவிகளும், எண்ணமாகவும், சிந்தனையாகவும் இருந்து கொஞ்ச கொஞ்சமாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டது. இத்தகைய சிறப்புமிக்க சிந்தனை பண்பை வளர்த்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...
🌐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment