வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 13
💥🔘💥🔘💥🔘💥🔘💥🔘💥
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ கருவில் உருவாகும் ஒரு குழந்தைக்கு நலந்தரும் விதத்தில் என்னென்னவெல்லாம் தேவையோ, அவை எல்லாவற்றையும் அடிப்படையாக அமைத்துக் கொண்டு வானில் விண்துகள்கள் கூடி இணைந்து இயங்கும், செயலுக்குத் தக்க விளைவு என்ற அடிப்படை நீதியை கொண்டு இந்த கருமைய இயக்கத்திற்கும் வானிலுள்ள அந்த விண்கள இயக்கத்திற்கும், எப்போதும் இணைப்பு இருந்து கொண்டே இருக்கும். உள்ளும் புறமும் உள்ள அமைப்பை இணைப்பதற்கு, இரண்டுக்கும் பொதுவான ஒரு நீதி செயல்அமைப்பு இருந்தே ஆக வேண்டும்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ இருவேறுபட்ட தன்மைதான் ஒன்றையொன்று எதிர்க்கும் கவரும். இயக்க வேறுபாடுகளை உணரும் குண்டலினி யோகம் ஆரம்ப பயிற்சியில் நமக்கு கிடைத்த அனுபவங்கள், நாளாக நாளாக நமக்கும் அதற்குமான இயக்க அமைப்பு ஒன்றுபடும் போது, ஒரு வெற்றிடம் இருப்பது போல அனுபவம் ஏற்படுவது இயல்பு. இதையும் கடந்து செல்லும்போது அதுவாகி நின்று அனுபவங்களை அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையின் இறைவனின் எல்லாவிதமான நீதியை அமைப்பை உணரமுடியும்.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ திட்டமிடல், அயரா விழிப்பு நிலை, தற்சோதனை, சகிப்புத்தன்மை, தியாகம், விட்டுக்கொடுத்தல் இந்த பண்புகள் இல்லாமல் நம்மால் நமக்கு உள்ளும் புறமும் இருந்து இயங்கும், உயிரியக்க அமைப்பை இறைநீதியை உணர்வது என்பது இயலாத காரியம். பொறுமையோடு அமைதியாக அன்றாடம் நம்முடைய செயல்களை எல்லாம் ஒழுங்கு படுத்திக் கொண்டு உடற்பயிற்சி, காயகற்பம், தவமும், இவைகளில் ஒவ்வொரு நாளும் தற்சோதனை செய்து உயிருக்கும், உடலுக்கும், மனதிற்கும், இயற்கைக்கும் இடையே உள்ள இனிமையை காத்துக்கொள்ளும் முயற்சிதான் இறைநிலையை உணர்தாகும் வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment