வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 11
🎱💯🎱💯🎱💯🎱💯🎱💯🎱
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 இந்த பிரபஞ்சத்தினுடைய ஒட்டுமொத்த சிறப்பும் ஒருங்கிணைந்து கொண்டு மனிதனாக தன் மாற்றம் பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் வலிமையானது மனிதர்களுடைய எண்ணம். இதற்கு ஈடு இணையாக எதுவுமேகிடையாது. இந்த அண்டவெளியில் இவ்வளவு சிறப்புகள் உடைய மனிதன் ஏன் துன்பப்படுகிறான்? எதனால் அமைதி இல்லாமல் வாழ்க்கையை நடத்துகிறான்? இவை அனைத்திற்கும் காரணம் இருக்கிறது.
🍥 இன்றைய தற்சோதனை
🍥 இயற்கை என்ற பேராற்றலுக்கும், மனிதனுக்கும் இடையில் நிறைய இடைவெளி உருவாகிவிட்டது. இந்த இடைவெளிகள் பூர்த்தி செய்யப்படும் போது, மனிதனின் சிறப்பு அனைத்தும் அவனுக்குள் இருந்து வெளிப்படும். எதனால் இந்த இடைவெளி ஏற்பட்டது என்றால் தேவையில்லாத தேவைகளை எல்லாம், தேவை ஆக்கிக்கொண்டு புலன் வழியாக மனிதன் வாழத் தொடங்கிய நாள் முதற்கொண்டு, இந்த இடைவெளி உருவானது. தற்சோதனை செய்து தேவைகளை முறைப்படுத்திக் கொண்டால் அந்த இடைவெளி படிப்படியாகக் குறைந்து விடும்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 யாருக்கும் எதுவும் தெரியாமல் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். இந்த பரந்த சிந்தனையோடு உயர்திணை, அஃறிணை அனைத்திலும் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான முயற்சியும் பயிற்சியும் தேவை. எனக்கு எல்லாம் தெரியும் என்ற சிந்தனை அறிவை மழுங்கடிக்கச் செய்துவிடும். இந்த சிந்தனை மனிதனின் சிறப்பு தன்மைகள் அனைத்தையும் சீரழித்து விடும். எல்லோருக்கும் பொதுவானது அறிவு. இந்த சிந்தனையையும், பண்பையும் நமக்குள்ளாக வளர்த்துக் கொள்ளும்போது மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது. வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment