வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மார்ச் 08
🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥
💠 இன்றைய நித்தியக்கடன்
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 இன்றைய சாதகம்
💠 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
💠 இன்றைய நற்சிந்தனை
💠 புவியியல், பொறியியல், தாவரவியல், வானியல், உடலியல், கணினியியல், இயற்பியல் இந்தவகையான பாடங்களைப் படிக்கும்போது அந்தந்த துறைசார்ந்த விஞ்ஞான அறிவில் மனிதர்கள் வளர்ச்சி பெறுகிறாகள். இவைகளை படிக்காமலும் அனுபவ ரீதியாகவும் சில பல புரிதல்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் வாழ்வியல் துறையில் எப்படி வெற்றி பெற போகிறீர்கள்.
💠 இன்றைய தற்சோதனை
💠 தொழில் சார்ந்த கல்வி அவசியமே. இருந்தபோதும் வாழ்வியலில் வாழ்க்கை கல்வியில் மனிதர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். உலகளாவிய ஆய்வில் வாழ்வியல் கல்வி மனிதர்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. மனஇயலில் நாம் முன்னேற வேண்டும். மனதைப் பற்றிய பாடத்தை படித்து புரிந்து கொள்ளும் போதுதான், வாழ்வியல் உண்மைகள் விளங்கும். இதில் தேர்ச்சி பெற முறையான உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகள் இல்லாமல் முழுமை பெறாது.
💠 இன்றைய பண்புப்பயிற்சி
💠 மனப் பாடத்தை படித்து சிறந்து விளங்க வேண்டுமானால், அதற்கான பண்பு நம்மிடையே அபரிமிதமாக பரந்து, விரிந்து, வளர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் மனப்பாடம் புரியும், மன இயலில் வெற்றி பெறமுடியும். அனைத்து நிலைகளிலும் பண்போடு வாழக்கூடிய, மனதை பற்றிய பாடத்தில் (மனப்பாடத்தில்) முதலில் தேர்ச்சி பெறுவோம். வாழ்க வளமுடன்...
💠 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💠 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment