நித்தியக்கடன் மார்ச் 06 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 06


🕸️🌸🕸️🌸🕸️🌸🕸️🌸🕸️🌸🕸️


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ மனதின் வழியாக நாம் நம்மை சார்ந்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும், எப்படி நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ, அதுவே நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும். அதுவே நம் வாழ்க்கையை தலைமை தாங்கி நடத்தக்கூடிய பண்பாகவும், நமக்கே தெரியாமல் நமக்குள் இருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும். நம்முடைய வாழ்க்கையை பற்றியும், நம்முடைய சூழ்நிலையை பற்றியும், நமக்கு எது மாதிரியான எண்ணம் இருக்கிறதோ, அது மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை இருக்கும்.


♻️ இன்றைய தற்சோதனை


♻️ இதற்கான உதாரணத்தை காண்போம்... நல்ல எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தால், அந்த பண்பே நம்முடைய வாழ்க்கையை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். மாறாக தீய எண்ணங்களை எண்ணிக்  கொண்டிருந்தால், அதுதான் நம்முடைய வாழ்க்கையின் பல சூழ்நிலைகளிலும் பிரதிபலித்து கொண்டே இருக்கும்.  மற்றவர்களிடம் நம்முடைய வாழ்க்கை சூழ்நிலைகளை பகிர்ந்து கொள்ளும் போது வறுமை, துன்பம், பொறாமை, அவதூறான பேச்சு, தன்முனைப்பாகவும் அதிகாரமாகவும் எந்த ஒன்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதுவே நம் வாழ்க்கையாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ வாழ்க்கை என்பது மிகவும் நுட்பமான இயக்க அமைப்பை உடையது. எதை முன் நிலைபடுத்தி நாம் நம்முடைய எண்ணம், சொல், செயல் அமைத்துக் கொள்கிறோமோ, அதுவே நம் வாழ்க்கையின் பின்புலமாக அமைந்து எல்லா வகையான நம் வாழ்க்கை சூழ்நிலைகளில், நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து எல்லாவிதமான காரண காரியங்களிலும் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் நாம் தெளிவாக உணர்ந்து கொண்டு, தெளிந்த சிந்தனையோடு மனதோடும் நாம் நம்முடைய வாழ்வை நிறைவாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...


♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments