வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 31
🔥💦🔥💦🔥💦🔥💦🔥💦🔥
☘️ இன்றைய நித்தியக்கடன்
☘️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
☘️ இன்றைய சாதகம்
☘️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
☘️ இன்றைய நற்சிந்தனை
☘️ எந்த ஒரு வாழ்க்கை சூழ்நிலையையும் அது என்ன என்று புரியாமல், தெரியாமல் அதனை கடந்து போகாதீர்கள் இது ஏன்? எதனால்? எப்படி? என்று எந்த ஒரு சூழ்நிலையையும் சரியாக சிந்தித்து புரிந்து கொண்டபின் முடிவெடுத்து நகருங்கள், சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து செல்வது அறிவுடைமையாகாது
☘️ இன்றைய தற்சோதனை
☘️ சிந்தித்து முடிவு எடுக்காத சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை தன்வயப்படுத்த முயற்சி செய்யும். ஆகவே அனைத்து சூழ்நிலைகளையும் தற்சோதனை செய்யுங்கள்.அதனுடைய ஆழம், அகலம், நீளம் இவைகளை சிந்தித்து புரிந்து கொண்டு வாழ்க்கையை தற்சோதனையோடு இனிமையாக வாழுங்கள்.
☘️ இன்றைய பண்புப்பயிற்சி
☘️ அறிவியல் என்ற சொல் அறிவாக இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளுதல். அதனுடைய தன்மைகளை நம் அனுபவமாக்கிக் கொள்ளுதலே ஆகும். சிந்தனை செய்ய, செய்யதான் அறிவியலும், இறைஇயலும், அதன் தன்மைகளும் அனுபவமாகும். ஆழ்மனதிற்கு அன்போடு வாருங்கள் உங்களுக்கான அறிவியல் தன்மை இங்கே இருப்பாக இருக்கிறது. அறிவியல் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து உயர்வோம். வாழ்க வளமுடன்...
☘️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
☘️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment