வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 30
🌌♨️🌌♨️🌌♨️🌌♨️🌌♨️🌌
🌸 இன்றைய நித்தியக்கடன்
🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌸 இன்றைய சாதகம்
🌸 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🌸 இன்றைய நற்சிந்தனை
🌸 உயிர்துகள்கள் மீது இருக்கும் விலங்கின பதிவினை போக்கிக் கொள்வதற்காக நாம் முயற்சியும், பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். இந்த உயிர்துகள்கள் மீது இருக்கும் விலங்கின பதிவுகளை அகற்றப்படும் போது தான், உயிர்துகள்கள் சுதந்திரமாக இந்த பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லா நிலைகளிலும் இணைந்து இயங்கும் வாய்ப்பினை பெறுகிறது. உயிர்துகள்கள் இவ்வாறு இயங்கும் போது தான் பிரபஞ்ச உண்மைகளை நம் மூளை செல்கள் வலியாக உணர, அனுபவமாக்கிக் கொள்ளமுடியும். "இதுவே வீடுபேறு என்று பேசப்படுகிறது"
🌸 இன்றைய தற்சோதனை
🌸 இந்த விலங்கின பதிவுகளை போக்கிக் கொள்வதற்காக நாம் முயற்சி மேற் கொள்ளாமல், புலன்கள் வழியே மயங்கிய நிலையில் செயல்பட்டு வாழும் போது, அதில் நமக்கு ஒரு திருப்தியும், மன நிறைவும் ஏற்படுவது இல்லை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு இந்த பிறவிக்கான செயலை விருப்பத்தோடு ஏற்று பயிற்சியோடு முயற்சி செய்யுங்கள். மன நோய்களும், உடல் நோய்களும் போக்கும். தற்சோதனை இதற்கான தளத்தை உருவாக்கி தரும்.
🌸 இன்றைய பண்புப்பயிற்சி
🌸 எந்த ஒரு வார்த்தையையும், கருத்தையும் அதன் உள்ளாழ்ந்த பொருளை, அர்த்தத்தை உள்ளதை உள்ளவாறு புரிந்து கொள்ளுங்கள். அதன் பொருளை, அர்த்தத்தை மாற்றி புரிந்து கொண்டு விடாதிர்கள். அதன் பின் நாம் மனவருத்தத்தையும், துன்பத்தையும் சந்திக்க நேரிடும். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளும் பண்பில் உயர்வு காண்போம். இந்நிலையிலும் பண்பிலும் வாழும்போதுதான் உயிர் உயர்ந்த நிலையில் இயங்கும், அதற்க்கென வாய்ப்பும் அமையும். வாழ்க வளமுடன்...
🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment