வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 28
🎯🕸️🎯🕸️🎯🕸️🎯🕸️🎯🕸️🎯
🌐 இன்றைய நித்தியக்கடன்
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌐 இன்றைய சாதகம்
🌐 ஞாயிற்றுக்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🌐 இன்றைய நற்சிந்தனை
🌐 நீரோடு நீர்சேரும், எண்ணெய்யோடு எண்ணெய் சேரும். இது போலத்தான் நீங்கள் எதோடு சேர்கிறீர்களோ நீங்களும் அதுவாகி விடுவீர்கள். உங்களுக்குள் எதை சேர்த்துக் கொள்கிறீர்களோ அதுவாக மாறுகிறீர்கள். உங்களோடு நீங்கள் எதை சேர்த்துகொள்ள வேண்டும், எதை உங்கள் இடத்திலிருந்து விலக்க வேண்டும் என்ற விளக்கத்தோடு வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தையும் நகர்த்தி பழகுங்கள்.
🌐 இன்றைய தற்சோதனை
🌐 உங்களுக்கு உள்ளாக நல்ல பழக்க வழக்கங்களுக்கு எவ்வளவு இடம் கொடுக்கிறீர்களோ அந்த அளவிற்கு, உங்களுக்குள் உங்களுக்கே தெரியாமல் இருக்கக்கூடிய போலி தன்மைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கப்படும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் -திருக்குறள். எதிலிருந்து எல்லாம் உங்களை நீங்கள் விலக்கிக் கொள்கிறீர்களோ, அதிலிருந்து எல்லாம் உங்களுக்கு துன்பம் கிடையாது. அதுமட்டுமன்றி உங்களுக்குள் நிரப்பப்பட்ட உண்மை மற்றும் சத்தியத்தின் அளவுக்கும் அடர்த்திக்கும் ஏற்ப இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய ரகசியங்கள் உங்களுக்கு புரிதலாகும்.
🌐 இன்றைய பண்புப்பயிற்சி
🌐 நல்ல பழக்கவழக்கங்களோடும், பண்புகளோடும், வைராக்கியத்தோடும், நம்பிக்கையோடும் வாழவேண்டும். இந்த மனிதப்பிறவி ஒரு புன்னியமான பிறவி. இதை விட்டு விலகி பாவம் செய்தல் கூடாது. நமக்குள் இருக்கும் ஞானத்தை வளர்ப்போம். அதற்கு எதிராக இருக்கும் பொய், சூது, களவு, கொலை, கற்பழிவு இவை அனைத்தையும் தவிர்ப்போம். வாழ்க வளமுடன்...
🌐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment