வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 27
🍁♾️🍁♾️🍁♾️🍁♾️🍁♾️🍁
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ உயிர் துகள்கள் இந்த பிரபஞ்சத்தில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. மற்ற நான்கு வகையான பூதங்களும் அளவு மீறினால் முறை மாறினால் அது ஒன்றை ஒன்று அழித்துவிடும். ஆனால் விண்துகள்கள் மற்ற நான்கு வகையான பூதங்களோடும் இணைந்து இயங்க கூடியது. இந்த விண்ணில் இருக்கக் கூடிய தன்மை தான், மற்ற நான்கு வகையான பூதங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தகவமைவுக்கோட்பாடு துகள்களை அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.
⛳ இன்றைய தற்சோதனை
⛳ உயிரின் சுழல் இயக்க வேகமும், அதன் ஓடும் விசையும் இயக்கமும், ஒரு மனிதனுக்குள் ஒரு உயிருக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறது. உயிரியக்க வேறுபாடே ஞானத்தை உருவாக்கும். பிரபஞ்ச உண்மைகளை உணர்வதற்கு உயிரியக்க வேகம், விரைவு, தேவை இதன் அடிப்படையிலேயே மூளை செல்களும், உடல் ஆரோக்கியமும், மன நலமும், வளமும் அமைகிறது. உயிருக்கான பயிற்சிகளை மனம் ஒன்றி செய்து தற்சோதனை பார்த்துக் கொள்ளுங்கள்.
⛳ இன்றைய பண்புப்பயிற்சி
⛳ அவரவர்களுடைய கருமைய தன்மைக்கு ஏற்ப, தூய்மைக்கு ஏற்ப, பிரபஞ்சத்தில் விரிந்து பரந்து இயங்கிக்கொண்டிருக்கும் உயிர் துகள்கள், கருமையம் வரை வந்து இயங்கும். இந்த நீதி எல்லோருக்கும் பொதுவானதாகும். இரண்டொழுக்க பண்பாட்டையும் கடைபிடித்து தன் வாழ்க்கையில், சரியான முறையில் பயிற்சிகளை செய்யும் எல்லோருக்கும், ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும். வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment