நித்தியக்கடன் ஜனவரி 26 2024 https://youtu.be/vmZRJqRH1dw

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 26


🎱💠🎱💠🎱💠🎱💠🎱💠🎱


🏮 இன்றைய நித்தியக்கடன்


🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏮 இன்றைய சாதகம்


🏮 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🏮 இன்றைய நற்சிந்தனை


🏮 நீ அதுவாக இருக்கிறாய்! ஆனால் நீ அது கிடையாது! நீ அதுவாக வேண்டுமானால் நீயாக நீ இருக்க கூடாது! அப்படியானால் நீ யார்..? பகவத்கீதையில் வியாசர் இந்த வாசகத்தை சொல்லியிருக்கிறார், இறைநிலையில் இருந்து நாம் வந்திருக்கிறோம். ஆனால் நாம் இறை நிலை கிடையாது. நாம் இறை நிலை ஆக வேண்டுமானால் நம்முடைய நிலைப்பாடு மாற வேண்டும். அப்படி மாறும் பட்சத்தில் நான் இறைநிலையாகவே வாழ முடியும்.


🏮 இன்றைய தற்சோதனை


🏮 இறை நிலைக்கும் நமக்குமான வேறுபாடு எதன் மூலமாக அமைந்தது. இந்த நிலைபாடு மாற்றம் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன. இறைநிலையில் இருந்து வித்து தொடராக இந்த மனித உருவத்திற்கு வந்திருக்கிறோம். இந்த பாவ பதிவுகள் மாற்றப்படும் போது அங்கே நிலை நிறுத்தப்படுவது இறைநிலை. இதுதான் இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள நிலைப்பாடாக இருக்கிறது.


🏮 இன்றைய பண்புப்பயிற்சி


🏮 இருக்கின்ற பாவ பதிவுகளை கழித்துக் கொள்ள வேண்டும். மேலும், மேலும் அவை பெருகாமல் ஞானப் பண்போடு வாழ வேண்டும். அவ்வாறு வாழும்போது நாமக்குள் உள்ளடங்கி இருக்கும் இறைதன்மை மேலோங்கத் துவங்கும். நல்ல செயல் பண்புகள் நாமக்குள் உயர, உயர நாம் அதுவாகவே மாறத்துவங்குவோம் காலம், செயல்திறன், தொடர்பு கொள்ளும் பெருள், இடம், நோக்கம் இவைகளுக்கு ஏற்ப இறை ராஜியத்தில் இணைவோம். இதில் என்னுடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப விளக்கம் கொடுத்திருக்கிறேன். நீங்கள் மேலும் இதில் முயற்சி செய்யுங்கள். வாழ்க வளமுடன்...


🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments