வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 03
♻️🌸♻️🌸♻️🌸♻️🌸♻️🌸♻️
💥 இன்றைய நித்தியக்கடன்
💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💥 இன்றைய சாதகம்
💥 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
💥 இன்றைய நற்சிந்தனை
💥 உங்களுடைய பழக்கவழக்கங்களை ஒரு பக்கம், ஓரமாக நகர்த்தி வையுங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய உண்மையினுடைய உயர்ந்த வலிமையை, சிறப்பை உங்களுடைய போலியான பழக்கவழக்கங்கள் இடைமறித்து, தனக்குள்ளாக புதைத்து கொள்கிறது மறைத்து விடுகிறது. நீங்கள் உண்மையாக இருந்து செயல்பட்டு அதன் மூலமாக உங்களுக்குள் பெருகிய தன்மை எதுவோ, அதுதான் இறைநிலையை உணர்வதற்கான ஞான பீடமாக அமைகிறது. ஆகவே உங்களுடைய பழக்கவழக்கங்களில் இருக்கக்கூடிய போலிகளை இனம் கண்டு அவைகளை களைஎடுக்க வேண்டும்.
💥 இன்றைய தற்சோதனை
💥 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். திருக்குறள் எதிலெல்லாம் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்களோ, அதில் எல்லாம் இருந்து உங்களுக்கு துன்பமில்லை மாறாக அதன் விளைவாக நீங்கள், உயர்ந்த அனுபவங்களை பெறுவீர்கள். அப்போதுதான் உண்மை நிலை தன்மையின் சிறந்த இயக்க அமைப்புகள் உங்களின் உயிரில் அமையும். இந்த அமைப்புதான் தெளிவையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. மனமும் தன்னுடைய இயல்பான நிலையை உணர்ந்துகொண்டு தெளிவு பெற்று தன் மூலத்தோடு இணையும் முயற்சியில் செயல்படத் துவங்கும்
💥 இன்றைய பண்புப்பயிற்சி
💥 மனதிற்கு பல்வேறு முகங்கள் உண்டு இவை அவ்வாறு இருந்து இயங்குவதற்கு இயற்கையில் சரியான காரணமும் இருக்கிறது இருந்தபோதும் இந்த மனித பிறவி யானது பன்முகத் தன்மை வாய்ந்த மனதை ஒருமுகப்படுத்தி அதன் வழியாக இறைநிலையை உணர்வதே ஆகும். நம் மனதில் நாம் விரும்பியதும் இருக்கிறது, விரும்பாததும் இருக்கிறது. இந்த மனதினுடைய பல்வேறுபட்ட முகங்களில் நல்லவைகளை தேர்வு செய்து கொண்டு, எப்போதும் உயர்ந்த சிந்தனையோடிருந்து வாழும் செயல் பண்பில் மனம் உயர்வு பெறும் போது தான். தான் துன்ப படாமலும் பிறரை துன்பப்படுத்தாமலும் வாழும் முறைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும். இந்த பண்போடு வாழ்வோம் நாளைய எதிர்கால சமுதாயம் வாழ வழிவகை செய்வோம். வாழ்க வளமுடன்...
💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
*🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment