வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
பிப்ரவரி 01
♦️🚥♦️🚥♦️🚥♦️🚥♦️🚥♦️
💐 இன்றைய நித்தியக்கடன்
💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💐 இன்றைய சாதகம்
💐 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💐 இன்றைய நற்சிந்தனை
💐 வான் மண்டலத்தை பற்றிய உண்மைகளை சிந்தனை செய்து பார்ப்பதற்கும் அனுபவத்தோடு ஞானிகளும், மகான்களும், மகரிஷிகளும் சொல்லியிருக்கிற வாக்கியங்களை நம்புவதற்கும் நம்மால் ஏன் முடிவதில்லை. ஏன் நம் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இந்த உண்மைகளை ஏற்க முடியாத அளவிற்கு அதற்கும் நமக்கும் இடையே ஏதோ ஒன்று இருந்து தடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த ஒன்று அகற்றப் படாத வரை, அதனுடைய தன்மையை மாற்றி அமைக்காத வரை அண்டவெளில் உள்ள உண்மைகளை நம்மால் நம்பவோ, அனுபவமாக ஏற்படுத்திக் கொள்ளவோ இயலாது.
💐 இன்றைய தற்சோதனை
💐 அப்படி இரண்டுக்குமிடையே இருந்து தடுப்பது எது. உயிரினுடைய படர்க்கை நிலையே மனம். உயிரிலிருந்து வெளியேறும் ஆற்றல் புலன்கள் வழியாக விரிவடைந்து மனமாக செயல்படுகிறது. இந்த உயிர் மீது படிந்து இருக்கக்கூடிய பாவவினை பதிவுகள்தான் தடுக்கிறது. உயிர் மீது உள்ள இந்த படிமம் பாவ வினை பதிவுகள் பூரணமான உண்மையை அனுபவமாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மயக்க உணர்சிகளை துண்டுகிறது.
💐 இன்றைய பண்புப்பயிற்சி
💐 நமக்கு பொருந்தாத பதிவுகளை, கற்பனையை நம்மிடையே அதிகரிக்கும் மனதிற்கு இது மயக்க நிலையை கொடுக்கும். அறிவோடு இணைந்து இயங்க முடியாத அளவிற்கு இந்த மயக்க உணர்ச்சி நிலை, புலன் வழியே நம்மை இழுத்துச் செல்லும். இவையெல்லாம் நாம் புரிந்து கொண்டால்தான் அவற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும். விடுபேறு என்பது எதனிடமோ, எங்கேயோ இருந்து விடுதலை நிலை அடைவது அல்ல. நம்மிடமுள்ள பாவ வினை பதிவுகளிடமிருந்து விடுதலை பெறுவதே முக்தி அறிவின் முழுமைப் பேறு. வாழ்க வளமுடன்...
💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment