நித்தியக்கடன் டிசம்பர் 31 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

டிசம்பர் 31


♾️🔶♾️🔶♾️🔶♾️🔶♾️🔶♾️


🕳️ இன்றைய நித்தியக்கடன்


🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🕳️ இன்றைய சாதகம்


🕳️ ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🕳️ இன்றைய நற்சிந்தனை


🕳️ நாம் பார்க்கின்ற அனைத்து உருவ தோற்றங்களும் அணுக்களின் கொத்து இயக்கமே ஆகும். அணுக்கள் கூடி இயங்குவதும், பிரிந்து இயங்குவதும் இயற்கையினுடைய மாபெரும் சிறப்பு. இந்த சிறப்பை சரியாக புரிந்து கொண்டு இது நடப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை உணர்ந்து கொண்டால் போதும் வாழ்க்கை இனிமையாகவும், அமைதியாகவும், நிறைவாகவும் மாறிவிடும்.


🕳️ இன்றைய தற்சோதனை


🕳️ அணுச்சிதைவு அணுச்சேர்க்கை இதுதான் இந்த பிரபஞ்ச ஒட்டுமொத்த இயக்கமும் ஆகும். இதைத்தாண்டி எதுவுமே கிடையாது. இந்த பருவுடல் முழுக்க முழுக்க அணுக்களால் ஆக்கப்பட்டது. இதில் அணுக்கள் கூடுவதும் பிரிவதுமாக இயக்கங்கள் நடைபெறுகின்றன. இந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பது இறைபேராற்றல். இந்த ஆற்றலின் மதிப்பை உணர்ந்து மனதை அதற்கு ஒத்த முறையில் பக்குவப்படுத்தி வாழ்வதற்காகவே இந்த மனித இனம் இந்த பூமியில் உண்டானது. தற்சோதனையில் உங்களை ஆழமாக ஈடுபடுத்திக்கொள்ளும் போது உங்கள் அறிவின் வழியாகவே அனைத்து உண்மைகளும் புரிதலாகும்.


🕳️ இன்றைய பண்புப்பயிற்சி


🕳️ இந்த அணுக்களின் இயக்க நீதியை புரிந்து கொள்வதற்கு, மனதை பக்குவப்படுத்தினால்  மட்டும்தான் முடியும். இதற்கு நாம் எப்போதும் நம்மை தகுதியுடையதாக வைத்துக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாது அந்த தகுதியை உயர்த்திக் கொண்டே வரவேண்டும். இந்த பயணத்தில் ஆங்காங்கே தடைகளும் ஏக்கங்களும் ஏற்படவே செய்யும். அதையும் தாண்டி உங்களுடைய விடாமுயற்சி உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றியை பெற்றுத்தரும். நல்ல முறையில் நல்ல நிலைகளுக்கு விடாமுயற்சி எனும் இப்பண்பை அமைத்துக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்...


🕳️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🕳️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


Comments