வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 25
💥🔘💥🔘💥🔘💥🔘💥🔘💥
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 நிலம், நீர், காற்று மாசுபடுவதை கண்டு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல்கள் இருக்கிறது. இது இதோடு மட்டும் நின்று விடாமல் வான்காந்தத்தையும் மாசுபடுத்துகிறது. இந்த மாசுபாடு எப்படி அமைகிறது என்றால், ஒவ்வொரு தனிமனிதனுடைய ஒழுங்கற்ற எண்ணம், சொல், செயல் வான்காந்தத்தை மாசுபடுத்துகிறது. இந்த மாசுபாடு இயற்கையை பாதிக்கிறது. பருவகாலங்கள், நிலவளம், மழைவளம், பயிர்வளம், மனிதப் பண்பு, உயிரியல் அமைப்பு இவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை, விளைவை ஏற்படுத்திவிடுகிறது.
🔰 இன்றைய தற்சோதனை
🔰 இவை அனைத்திற்கும் மனிதர்கள் பெருள்பற்றோடும், அதிகாரபோதையோடும், சுயநலத்தோடும் தானும் வாழாமல், மற்றவர்களையும் வாழ விடாமல், பழக்கத்திற்கும், விளக்கத்திற்குமான போட்டியில் இவ்வாறன கேடுகளை மனிதர்கள் உருவாக்கி விடுகிறார்கள் துன்பமடைகின்றார்கள். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தயாரிக்கப்பட்ட வாகனம் எப்படி ஒரு Failure Model என்றாகிறதோ, அதுபோல மனிதர்கள் வாழும் இந்த வாழ்க்கையை Failure Life என்று இறைவன் உணர்த்துகின்றான். இறையியல், அறிவியல் அதன் கோட்பாடுகள் இதனை உணர்ந்து கொள்ளாமல் வாழ்வது அறிவின் குறைபாடு.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 உலக மக்கள் அனைவருக்குமான பொறுப்பு இது. உலக நல வாழ்த்தாகவும், மழை வாழ்த்தாகவும், உலக நல வேட்பாகவும் மனிதர்கள் வாழும் போது இன்றைக்கு இருக்கக்கூடிய அனைத்து மாசுகளும் சீரமைந்து விடும். வாசிப்பதோடு மட்டும் கடமை முடிந்துவிடாது. முழுமையான வாழ்த்தாகவே வாழ வேண்டும். முழுமையாக வாழ்த்தி வாழ்ந்தால் மட்டும் தான் வான்காந்த மாசுபாடு மாற்றம் பொறும். ஆகவே மாசுபாடு இல்லாத வான்காந்தத்தை வாழ்த்தி வரவேற்போம். அந்த காலத்தை நோக்கி பயணிப்போம். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment