வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 24
☘️💢☘️💢☘️💢☘️💢☘️💢☘️
🔥 இன்றைய நித்தியக்கடன்
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 இன்றைய சாதகம்
🔥 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔥 இன்றைய நற்சிந்தனை
🔥 நாம் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்த பூமியை வான் மண்டலத்தில் இருந்து பார்ப்பதற்கு நீலநிறத்தில், ஆங்காங்கே சிறியசிறிய நிலப்பரப்பு, மேக மண்டலத்தோடு அழகாக காட்சியளிக்கிறது. இந்த பூமி ஆரம்ப காலகட்டங்களில் இப்படித்தான் இருந்ததா என்றால் இல்லை. காலங்கள் செல்ல செல்ல இந்த பூமியில் செடி, கொடிகளும், மரம் வளர்வதற்கான அமைப்பு உருவானது. இதனோடு இவை நின்றுவிடாமல் பல உயிர் வகைகள் தோன்றுவதற்குரிய தகவமைப்பை இந்த பூமி ஏற்படுத்திக் கொண்டது.
🔥 இன்றைய தற்சோதனை
🔥 கோடான கோடி காலங்கள் சென்றபின் தான் உயிரினம் வாழ்வதற்குரிய வாய்ப்புகள் இந்த பூமியில் உருவானது. ஏதோ ஒருநாள் மாற்றத்தில் இது ஏற்பட்டது அல்ல. இந்த பூமியில் இருக்கக்கூடிய கனிமவளங்கள், இயற்கை மூலிகைகள், தாதுப்பொருள்கள், இந்த பூமியை சுற்றியுள்ள காற்றுமண்டலம், ஓசோன் மண்டலம் அத்தனையும் நமக்கு இயற்கை கொடுத்த அன்பு பரிசு. இதை இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..? இயற்கையை மாசு படுத்தி விடாமல் நம்முடைய அடுத்த சமுதாயத்திற்கு முழுமையாக, இந்த சிறப்பான பூமியை கொண்டு செல்ல வேண்டும்.
🔥 இன்றைய பண்புப்பயிற்சி
🔥 நம்மைச்சுற்றி இருக்கக்கூடிய நல்லதொரு மாற்றங்களை, வளங்களையெல்லாம் அழித்துவிட்டு, ஒரு நாளும் நாம் நிம்மதியாக வாழ முடியாது. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறது. உணவு சங்கிலி, உயிர் சங்கிலி, பிரபஞ்ச சங்கிலி என்று எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கிறது. ஒன்றைக் கெடுத்துவிட்டு இன்னொன்று நலமாக வாழ்வது என்பது இயலாத முடியாத ஒன்றாகும். ஆகவே நாமும் வாழ்வோம் நாம் பெற்ற நல்ல பல வளங்களையும் வாழவைப்போம். குறிப்பு:- இதில் உயர்திணை, அஃறிணை என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. வாழ்க வளமுடன்...
🔥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment