நித்தியக்கடன் ஜனவரி 23 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 23


🔳🔮🔳🔮🔳🔮🔳🔮🔳🔮🔳


♻️ இன்றைய நித்தியக்கடன்


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


♻️ இன்றைய நற்சிந்தனை


♻️ ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கு முன்னும் பின்னும் நீண்ட நெடிய தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது. நமக்குள் இருக்கும் கருமைய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய எதிர்காலம் என்பது உருவாகிறது.  உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மனம் எப்போதும் மிதந்து கொண்டிருந்தால், விளைவுகள் துன்பமானதாக அமையும். நாம் கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.


♻️ இன்றைய தற்சோதனை


♻️ நம்முடைய முன்னோர்கள் செய்த அனைத்து செயல்களின் தரவுகளையும் ஆய்வு செய்து தான், நமக்கு ஒரு விளைவை இறைநிலை இயற்கை எனும் பேராற்றல் உருவாக்கித் தருகிறது. இந்த உண்மைகளை எல்லாம் உணரவேண்டுமானால் உடற்பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இவைகளுடைய விஞ்ஞானத்தை நாம் உணர வேண்டும். இந்த பயிற்சிகளில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு வாழும் போதுதான் உண்மை நிலை புரியவரும்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ நான் எந்தவிதமான தவறுகளும் செய்யவில்லை, என்று நமக்குத் தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், நம்முடைய முன்னோர்களுக்கு முன்னோர்கள் மூதாதையர்கள், ஐந்தறிவு, நான்கறிவு, மூன்றறிவு, இரண்டறிவு, ஜீவனாக வாழ்ந்தபோது நாம் பெற்ற தீய வினை பதிவுகள் இருக்கத்தான் செய்யும். இதை மறுப்பதற்கும் வெறுப்பதற்கும் எதுவுமே இல்லை. ஏற்றுக் கொள்வது ஒன்றே இறுதி முடிவாகும். வாழ்க வளமுடன்...


♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments