நித்தியக்கடன் ஜனவரி 21 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 21


⚙️🕳️⚙️🕳️⚙️🕳️⚙️🕳️⚙️🕳️⚙️


🔶 இன்றைய நித்தியக்கடன்


🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔶 இன்றைய சாதகம்


🔶 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


🔶 இன்றைய நற்சிந்தனை


🔶 நம்முடைய உயிருக்கு என்று ஒரு தளம் இருக்கிறது. அந்த தளத்தில் இருந்து உயிர் இயங்கும் போது, பஞ்சபூத தத்துவத்தில் முதல் தத்துவமாகிய, விண்ணும் விண்ணினுடைய மற்ற இயக்கங்களும், நமக்கு தெளிவாக புரியும் நேரடியாக அனுபவமாகும். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படக்கூடிய இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும், இந்த பிரபஞ்ச உண்மைகளை உயிரின் உண்மைகளை புரிந்து கொள்ளாத மயக்க, உணர்ச்சிவயப்பட்ட மனோநிலையில் செய்யப்படும் செயல்பாடுகளே காரணமாக இருக்கிறது.


🔶 இன்றைய தற்சோதனை


🔶 தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்களை தவிர்த்தும், மாற்றி அமைத்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய புதிய பழக்கங்களில் நம்மை இணைத்துக் கொண்டும், வாழ்வதற்கு நாம் தயாராக வேண்டும். தனித்தனியாக பிளவுபட்டு இயங்கும் மனதை, உயிரின் இயக்கத்தை ஒன்றிணைத்து இணைக்க வேண்டும். யோக நெறிகளை பின்பற்றும்போது, நம்முடைய DNA அமைப்புகள் விடுபடாமல் ஒன்றிணைந்து முழுமையாக இயங்குகிறது, என்ற உண்மையை தற்சோதனை செய்து உணர்வோமாக.


🔶 இன்றைய பண்புப்பயிற்சி


🔶 விண்ணில் தொடங்கி இந்த பிரபஞ்ச இயக்கம் மண்ணில் நிறைவுபெறுகிறது. இடைப்பட்ட இயக்கங்களையும், நிகழ்ச்சிகளையும், உற்று உணர்ந்து அனுபவம் ஏற்படுத்தி கொள்வதற்காகவும் மிகச்சிறந்த இந்த மனித சரீரம் அமைந்துள்ளது. ஞானத்திற்கே செயலாற்றி, ஞானத்தின் வழியாகவே வாழ்வை நிறைவாக வாழ்வோமாக. உள்ளதை உள்ளவாறு உணர்ந்து, நல்லதை செய்து, அல்லது தவிர்த்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...


🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments