நித்தியக்கடன் ஜனவரி 20 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 20


♨️💠♨️💠♨️💠♨️💠♨️💠♨️


🚥 இன்றைய நித்தியக்கடன்


🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🚥 இன்றைய சாதகம்


🚥 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🚥 இன்றைய நற்சிந்தனை


🚥 ஆன்மீக தேடல் என்பது தொலைதூரத்தில் இருக்கும், ஏதோ ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் புரிந்துகொள்வதற்குமான பயணமல்ல. நமக்குள்ளாக  நம்மோடு நாமாகவே இருக்கும் ஒன்றை பற்றிய புரிதல்.


 "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்"


        - கவிஞர் கண்ணதாசன்


அவனை உணர்ந்து கொள்வதுதான் இறைத்தேடல் எங்கேயோ இந்த பிரபஞ்சத்துக்கு அப்பால் இல்லை. இறைவன் நம்மோடு நமக்குள் நாமாகவே இருக்கின்றான்.


🚥 இன்றைய தற்சோதனை


🚥 இறைநிலையினுடைய பூரணமான தன்மாற்றம் முதற்கொண்டு இந்த பிரபஞ்சம் வரை, இதில் ஏதேனும் சந்தேகம் எழும் என்றால் அந்த சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.  இதனை போலித்தனமான எண்ணங்களை கொண்டோ, அல்லது விளக்கங்களை கொண்டோ நிரப்பி விடமுடியாது. உண்மையான தெளிவு ஒன்றினால் மட்டும்தான்  இறைவனின் தன்மாற்றம் அனைத்தையும் புரிந்து கொள்ளமுடியும். தற்சோதனை செய்யுங்கள் அது ஒன்றுமட்டும்தான் இதற்கான வழிமுறையாகும்.


🚥 இன்றைய பண்புப்பயிற்சி


🚥 யாவுமாக இருக்க கூடிய இறை பேராற்றல் இயற்கை என்ற இறைவன் எங்கேயும், எப்போதும், எதன் மீதும், எவர் மீதும் ஆதிக்கம் செலுத்துவது இல்லை. இது தான் நான் என்று அவன் தன்னை அடையாள படுத்திக் கொள்வதே இல்லை. அவனுடைய நீண்ட நெடிய தன்மாற்ற சரித்திரத்தில் எந்த ஒரு இடத்திலும், இது நான் என்று அவன் எந்த ஒரு பதிவையும் ஏற்படுத்திக் கொள்ளவதில்லை. இவ்வளவு சிறப்புமிக்க இறைநிலையின் தன்மாற்றம் மனித இனம். அவனுடைய முழுமையான தன்மாற்றம் நாம் தான். அவனை உணர வேண்டுமானால் அதற்கு உரிய பண்புகள் நமக்குள் உயர வேண்டும். அது மட்டும் உயர்ந்தால் போதும் என்ன அந்தப் பண்பு. தன்னில் துவங்கி எவருக்கும் துன்பம் செய்யாமை தான் அப்பண்பு. வாழ்க வளமுடன்...


🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments