நித்தியக்கடன் ஜனவரி 19 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 19


💢⚪💢⚪💢⚪💢⚪💢⚪💢


💥 இன்றைய நித்தியக்கடன்


💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💥 இன்றைய சாதகம்


💥 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


💥 இன்றைய நற்சிந்தனை


💥 உங்களுடைய வாழ்க்கை பயணத்தில் ஆங்காங்கே ஏற்படக்கூடிய சிக்கல்களையும், சிரமங்களையும், இடர்பாடுகளையும், இன்னல்களையும் கண்டும் காணாமல் நகர்ந்து சென்று விடாதீர்கள். சூழ்நிலை மாற்றம் அடையும்போது அந்த நிகழ்வுகளை கூர்ந்து கவனியுங்கள். இந்த சிக்கலும் இடர்பாடும் ஏன் உருவானது? எதனால் உருவானது? இப்படி ஒரு சூழல் உருவானதற்கு நான் எந்த அளவு காரணம்? மற்றவர்கள் இதில் எந்த அளவு காரணமாக  இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் ஆய்வு செய்து கணக்கிட்டுக் கொண்டு அதன்பின் தெளிவான மனநிலையில் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்.


💥 இன்றைய தற்சோதனை


💥 Risk எடுத்து வாழ்வதற்கு வாழ்க்கையில் எதுவுமே கிடையாது. ஆனால் Risk எடுத்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் வாழ்க்கையில் நிறையஇருக்கிறது. வாழ்க்கை என்பது முழுமையான புரிதல். புரிதல் இல்லாமல் உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலைகளை அணு அளவு கூட கடந்து செல்லாதீர்கள். புரிதலோடு வாழும் வாழ்க்கைதான் நம்மை உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்லும். சிறிய, பெரிய சிக்கல்கள் என்று எதையும்  விட்டுவிடாதீர்கள். அனைத்து வாழ்க்கை சூழ்நிலைகளையும் தற்சோதனை செய்து புரிந்து கொள்ளுங்கள்.


💥 இன்றைய பண்புப்பயிற்சி


💥 அவசர அவசரமாக ஓடிக்கொண்டே இருக்காமல், உங்கள் வாழ்க்கை சூழ்நிலைகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல், அவைகளை கடந்து சென்று கொண்டே இருந்தீர்கள் என்றால், ஒரு காலகட்டத்தில் நின்று திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் என்று எதுவுமே இருக்காது. வாழ்தல் என்றால் நின்று! நிதானித்து! இதுதான்! என்று புரிந்துகொண்டு எண்ணம், சொல், செயல்களை பயன்படுத்துவதேயாகும். நமது எண்ணம், சொல், செயல் இதனை இறைநிலை நோக்கி உயர்த்த கூடிய பண்பில் உயர்வு காண்போம். வாழ்க வளமுடன்...


💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments