வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 18
♻️🎲♻️🎲♻️🎲♻️🎲♻️🎲♻️
💯 இன்றைய நித்தியக்கடன்
💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💯 இன்றைய சாதகம்
💯 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💯 இன்றைய நற்சிந்தனை
💯 எல்லாம் வல்ல தெய்வநிலை, இயற்கையாக வளர்ந்து நாம் வரை முழுமை பெற்று ஒரு முழுமையான, தன் மாற்ற சரித்திரத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் நமக்கான வாய்ப்புகள், நாம் பெறுவதற்கான வாய்ப்புகள் நிரம்பி இருக்கின்றன. இந்த வாய்ப்புகளையெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டுமானால் முதலில் நமக்கு சில தகுதிகள் தேவைப்படுகின்றன. அந்த தகுதி இல்லாமல் நம்மால் அவைகளை எடுக்க முடியாது. ஏன்?...
💯 இன்றைய தற்சோதனை
💯 இறைவன் கொடுத்து வைத்திருக்க கூடிய ஏராளமான வாய்ப்புகள், அகநிலையிலும் புற வெளியிலும் மிதந்து கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளை நம்மால் அவைகளை எடுக்கவோ, எடுத்து பயன்படுத்தவோ முடிவதில்லை. காரணம் அவைகளை எடுத்து பயன்படுத்தக்கூடிய தகுதியை, நாம் இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. இதனை வளர்த்துக் கொள்வதற்காக முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான் யோகக் கலை ஆகும்.
💯 இன்றைய பண்புப்பயிற்சி
💯 பழங்காலத்தில் இருந்த யோக முறைகளை தற்காலத்தில் எளிமைப்படுத்தி, simplified kundalini yoga என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். நாள் தவறாமல் இந்த பயிற்சிகளை முழு நம்பிக்கையோடு செய்யும் போது, நமக்கு எல்லா வகையிலும் இந்த வாய்ப்புகளை எடுப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் உரிய தகுதி உருவாகிறது, என்ற உண்மையை நாமே நம்முடைய வாழ்க்கை அனுபவமாக பெறமுடியும். நாம் துவங்கி வைப்போம், நம்முடைய சந்ததிகள் வந்து வாழட்டும், ஞான வாழ்க்கையை. வாழ்க வளமுடன்...
💯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment