நித்தியக்கடன் ஜனவரி 17 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 17


🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷


🎱 இன்றைய நித்தியக்கடன்


🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎱 இன்றைய சாதகம்


🎱 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🎱 இன்றைய நற்சிந்தனை


🎱 மனிதர்களுடைய மனமானது தன்னை சுற்றி இருக்கும் அனைவரிடமும் பலவிதமான தேவையை, பழக்கத்தை, எதிர்பார்ப்பை முன் வைத்தே எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது, எனக்கு பிடித்தது போல மற்றவர்கள் பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும், செயல்களை செய்ய வேண்டும் எனக்கு பிடிக்காத எதையும் என்னை சுற்றியுள்ள யாரும் செய்யக்கூடாது, என்று மனம் பலவிதமான எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருக்கிறது, ஆனால் எதார்த்தமான வாழ்க்கையில் இது சாத்தியமா என்று சிந்தித்தால் நிச்சயமாக இது சாத்தியம் கிடையாது.


🎱 இன்றைய தற்சோதனை


🎱 அவரவர்களுடைய அறிவாச்சி தரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப  ஒருவருக்கொருவர் எப்போதும் ஒத்த எண்ணத்தோடு இருப்பதற்கு இயலாது ஏனென்றால் மனிதர்கள் 16 விதமான காரணங்களை கொண்டும், 7 அடிப்படை தன்மைகள் கொண்டும் மனிதருக்கு மனிதர் மாறும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாது, அந்த பதினாறு காரணங்கள் கருவமைப்பு, காலம், தேசம், கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி, பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி, பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றைக்கேற்ப உருவமைப்பு, அறிவில் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் யாவும் மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும்.


🎱 இன்றைய பண்புப்பயிற்சி


🎱 ஆகவே மற்றவர்களிடம் தேவையில்லாத எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு, நம்முடைய கடமைகளை அன்றாட வாழ்க்கையில் நிறைவாக செய்து, தானும் நிறைவாக வாழ்ந்து இந்த மண்ணுலகில் மனிதனாக பிறந்த பிறவியின் நோக்கத்தை ஈடு செய்யும் விதமாக நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர் நிறை உணர்வு, மன்னிப்பு ஆகியவற்றில் உயர்ந்து, உடல் பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை நாள் தவறாமல் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு விலங்கின பதிவுகளில் இருந்து விடுபட்டு ஆறாவது அறிவியல் முழுமை பெறுவோமாக. வாழ்க வளமுடன்...


🎱 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎱 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments