நித்தியக்கடன் ஜனவரி 16 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 16


🔘☘️🔘☘️🔘☘️🔘☘️🔘☘️🔘


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🍁 இன்றைய சாதகம்


🍁 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.


🍁 இன்றைய நற்சிந்தனை


🍁  மனிதர்களுடைய ஆறாவது அறிவின் சிறப்பு, புதிது புதிதாக அனுபவங்களை பெறுவதும், பல்வேறு ஆராய்ச்சிகளில் தன்னை மேம்படுத்திக் கொள்வதும், புலன்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய உண்மைகளை, புலன்களை கடந்து உணர்ந்து கொள்வதற்காகவும் உருவானதாகும். நமக்காக அமைந்திருக்கும் இறைநிலை மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளில், இறைநிலை நம்மை நமக்கே தெரியாமல் எப்போதும் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பழக்கத்தின் காரணமாக நாம் திசைமாறி, புலன் வழியில் அந்த தூண்டுதல்களுக்கு செயல்களை செய்து விடுகிறோம்.


🍁 இன்றைய தற்சோதனை


🍁 இறைநிலையின் தூண்டுதலை உள்ளதை உள்ளவாறு உணர்வதற்கு, நாம் மனதை ஒரு பக்குவ நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். மனப்,பக்குவம் இல்லாமல் நம்மால் இந்த பிரம்ம நிலை இயக்கங்களையும், இறைநிலையின் தன் மாற்ற சரித்திரத்தையும் உணர முடியாது. தன்னை அதற்கென்று பல வகைகளிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய, அவசியமும் தேவையும் இருக்கிறது. இந்த உண்மைகளை உளமாற ஏற்று, உளப்பயிற்சியில் ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோமாக.


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 "பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது ஒரே மாதிரியானது. ஆனால் செயல்படும் விதத்திலும் முறையிலும் மனிதர்கள் அதிலிருந்து சற்று வேறுபட்டுகிறார்கள். தன்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்திக்கொள்ள முடியும். இந்த மாற்றத்தின் அடிப்படையில் இறைநிலை மனிதனுக்கு மிகப் பெரிய வாய்ப்பை, ஆறாவது அறிவின் சிறப்பாக வழங்கியிருக்கிறது. உள்ளதை உள்ளவாறு உணர்ந்து, தொண்டாற்றி இன்பம் காண்போம். வாழ்க வளமுடன்...


🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments