வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 15
🌼🔰🌼🔰🌼🔰🌼🔰🌼🔰🌼
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 ஒரு கல்லை மேலே தூக்கி எறிந்தால் அது மீண்டும் இந்த தரைதளத்தில் வந்து விழும். Gravity Force இதனால் நடைபெறும் நிகழ்வு இது. இதுபோலவே தவத்தில் ஆழ்ந்து ஒடுங்கி உள்ளே சென்றாலும் சுத்தவெளி. விரிந்து விரிந்து வெளியே சென்று பிரபஞ்சத்தை எல்லாம் கடந்து நின்றாலும் சுத்தவெளி. இந்த சுத்த வெளியில் நம்முடைய எண்ணங்களை கொண்டு சென்று அங்கேயே அவைகளை விட்டுவிட்டு தவத்தை நிறைவு செய்துகொள்ளும் முயற்சியும், பயிற்சியும்தான் மனவளக்கலை.
🚥 இன்றைய தற்சோதனை
🚥 இது ஒரு யோக சாதனை மார்க்கம். இந்த மார்க்கத்தில் அவரவர் சொந்த தனிமுயற்சிதான் வெற்றியை உருவாக்குகிறது. உங்களுக்கான ஞானத்தை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறு எவர் ஒருவராலும் ஞானத்தை வழங்க முடியாது, அதனை வாங்கிக் கொள்ளவும் முடியாது. ஏனெனில் ஞானம் என்பது அவரவர் கருமையத்துக்குள் முழுமையாக விதைக்கப்பட்டிருக்கிறது.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 மற்ற உயிர்களை இம்சை செய்யாமல் வாழும் பண்பு அகிம்சை. இதை அப்படி மட்டும் சிந்தித்து விட்டுவிடாமல், தன்னை தானேயும் துன்பம் செய்து கொள்ளாமல் வாழும் சிறந்ததொரு பண்பே அகிம்சை. தன்னைதானே இம்சை செய்து கெள்ளாமல் மற்றவர்களையும் இம்சிக்காமல் வாழும் பண்பு அகிம்சை. நமக்குள் இருக்கும் ஞானவிதையை முழுமையாக வளர்வதற்கான அத்துனை அம்சங்களுமுடையது இந்த அகிம்சை. இப்பண்பில் ஒவ்வொரு கணமும் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment