வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 14
💢🔮💢🔮💢🔮💢🔮💢🔮💢
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ காட்டாற்று வெள்ளமானது அது போகிற பாதைகளில் இருக்கும், பலவீனமான அனைத்தையும் அடித்து கொண்டு போய், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைத்து விடும். நம்முடைய எண்ணம், சொல், செயல், கோள்களின் அமைப்பு இவைகளுக்கு ஏற்ப, இந்த காட்டாற்று வெள்ளமானது அனைத்தையும் அடித்துக் கொண்டு செல்வது போல், பல வகையான எண்ணங்களையும் செயல்களையும் அடித்து கொண்டு செல்லும். வாழ்க்கை சூழ்நிலையையே இடம் விட்டு இடம் மாற்றி அமைத்து விடும்.
⛳ இன்றைய தற்சோதனை
⛳ இதிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? நம் வாழ்க்கை இதில் சிக்கி சிதைவடையதான் வேண்டுமா? என்றால்... இதிலிருந்து எளிமையாக நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இருசக்கர வாகனமோ நான்கு சக்கர வாகனமோ, எதுவாக இருந்தாலும் அதில் உள்ள அனைத்தும் நல்ல நிலையில் இருந்தால்தான் நாம் சுலபமாக நம்முடைய பயணத்தை நிறைவு செய்து கொள்ள முடியும். பழுதடைந்த பகுதிகளோடு உள்ள வாகனத்தில் பயணம் செய்தால், அந்தப் பயணம் எப்படி நம்பகத்தன்மை இல்லாததாக இருக்குமோ, இப்போது நம்முடைய வாழ்க்கையும் அந்த நிலையில்தான் இருக்கிறது, என்ற உண்மையை தற்சோதனை செய்து உணர்ந்து கொள்வோமாக.
⛳ இன்றைய பண்புப்பயிற்சி
⛳ வாகனம் என்பது நம்முடைய பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் நம்முடைய வாழ்க்கை பயணமானது, நடந்து கொண்டிருக்கிறது. இந்த மூன்றிலும் இருக்கக்கூடிய பழுதுகளை எல்லாம் நீக்கி விட்டால், நீக்குவதற்கான முயற்சியிலும் நம்மை இணைத்துக் கொண்டால், படிப்படியாக நம்முடைய வாழ்க்கை பாதுகாப்பு நிறைந்ததாக, ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் இயங்கத் துவங்கும். அருள்காப்போடு நாமும் நம் குடும்பமும் நிறைவாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment