வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 13
♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️🔥♻️
❄️ இன்றைய நித்தியக்கடன்
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ இன்றைய சாதகம்
❄️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
❄️ இன்றைய நற்சிந்தனை
❄️ தண்ணீரில் சர்க்கரையை கரைத்து விட்டால் தண்ணீர் இனிப்பு சுவையை கொடுக்கும். உப்பை கரைத்தால் அந்த நீர் உவர்ப்பு சுவை கொடுக்கும். உப்புக்கும், சர்க்கரைக்கும் பொதுவானது நீர். இது போன்று யாவர்க்கும் பொதுவாய் உள்ளவன் இறைவன். அவனுக்குள் சென்று கரைபவர்களுக்கு தகுந்தார் போல, அவன் அவனையும் மாற்றிக் கொள்கிறான் நம்மையும் மாற்றுகிறான்.
❄️ இன்றைய தற்சோதனை
❄️ கெட்டி பொருளான உப்பாகவும், சர்கரையாகவும் நாம் இருந்தாலும் இறைவழியில் இணையும்போது திரவப் பொருளாக மாறி விடுகிறோம். திடப் பொருளில் இருந்து திரவநிலைக்கு மாறினாலும், நம்முடைய தன்மை மாறாமல் வெளிப்படவே செய்கிறது. இந்த தன்மைகளை மாற்றி அமைக்க நாம் வைராக்கியத்தோடும், விடாமுயற்சியோடும் தற்சோதனை செய்து அந்த முடிவுகளில் நிலைத்து நின்று, மீண்டும் மீண்டும் வாழமுயற்சி செய்ய வேண்டும்.
❄️ இன்றைய பண்புப்பயிற்சி
❄️ சாதனை மார்க்கமாகிய மனவளக்கலையில், நாமும் சாதனையாளராக மாறுவதற்கும், இந்த ஞான மார்க்கத்தில் நாம் வெற்றி காண்பதற்கும், நமக்கு விடாமுயற்சியும், வைராக்கியமும் தேவை. இந்த பண்புகள் நமக்குள் மேலோங்கி சிறக்கும்போது தான் நாம் சாதனையாளராக திகழ முடியும். பழங்கதைகளில் புதைந்து போகாமல் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளுங்கள். நடந்து முடிந்த வரலாறுகளிலிருந்து நாம் பாடம் கற்போம், புதியபாதை வகுப்போம், நம்முடைய வாழ்க்கை பாதையை ஞான மார்க்கத்தில் விதைப்போம். வாழ்க வளமுடன்...
❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment