நித்தியக்கடன் ஜனவரி 12 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜனவரி 12


🎲🕸️🎲🕸️🎲🕸️🎲🕸️🎲🕸️🎲


💯 இன்றைய நித்தியக்கடன்


💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


💯 இன்றைய சாதகம்


💯 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


💯 இன்றைய நற்சிந்தனை


💯 நம்முடைய உயிருடலும் காந்த உடலும் அருள்பேராற்றலோடு இணைந்து தான் இருக்கிறது. இருந்தபோதும் குறிஞ்சி நிலத்தில் விலையும் மரம் செடி கொடிகளை, முல்லை நிலத்தில் விதைத்தால் அதனுடைய தன்மையும் தரமும் மாறி இருக்கும். அது போலத்தான் மண்ணின் தன்மைக்கும் தரத்திற்கும், தக்கவாறு எப்படி ஒரு விதை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதோ, அது போலத் தான் அருள் பேராற்றலும் இணைகின்றது. மனிதர்களின் கருமையத்திற்கு தக்கவாறு தன்னுடைய, தரத்தையும் தன்மையையும் மாற்றி அவர்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்கிறது.


💯 இன்றைய தற்சோதனை


💯 அருட்பேராற்றலே அணைத்துமாக இருந்த போதும் அதனுடைய தன்மையும் தரமும் மாறி இருக்கிறது. மனிதனிடத்தில் அருட்பேராற்றல் பிழை திருத்தம் செய்து கொள்ளும் முறையில் அமைந்துள்ளது. அதில் உள்ள பிழைகள் எல்லாம்  ஒழுங்கமைக்கப்பட்டுவிட்டால், அருட்பேராற்றல் முழுமையாக இயங்க துவங்கும். அதற்கான முறையான பயிற்சி தான் வேதாத்திரியம்.


💯 இன்றைய பண்புப்பயிற்சி


💯 கற்பனைக்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. கற்பனைக்கு நமக்குள்ளாக அதிகமாக இடம் கொடுத்து விட்ட காரணத்தால், உண்மையை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றோம். உண்மை என்பது மிகமிக எதார்த்தமானது, எளிமையானது. இதற்கு நேரெதிராக நம்முடைய கற்பனைகள் பலமாக கோட்டை கட்டிக் கொண்டு நிற்கிறது. அருட்பேராற்றல் நமக்குள் இருந்து வெளிப்படாதற்கு காரணம் இதுதான். இந்த பிழைகளை திருத்திக் கொண்டு, திடமான முடிவுக்கு நம்மை ஆட்படுத்தி, அருட்பேராற்றலோடு நிறைவாக வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...


💯 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💯 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments