வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜனவரி 11
♦️🕳️♦️🕳️♦️🕳️♦️🕳️♦️🕳️♦️
💦 இன்றைய நித்தியக்கடன்
💦 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💦 இன்றைய சாதகம்
💦 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💦 இன்றைய நற்சிந்தனை
💦 நம்முடைய எல்லா வகையான செயல்களையும், நிதானமாகவும், அமைதியாகவும் இருக்கும்படி கவனத்தோடு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிதானமான அமைதியான பழக்கம் எதற்காக என்றால் உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நம்மை ஆழமாக அழைத்துச் செல்வதற்கு பேருதவியாக இருக்கும். தவத்தின் போது மட்டும் அமைதியாக ஆழ்ந்து செல்ல முயற்சிப்பது ஒரு வேடிக்கையான நாடகம். மற்ற எல்லா வகையிலும் நாம் நம்மை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும்போது மட்டும்தான் தவத்தில் ஆழ்ந்து செல்லமுடியும். அந்த பழக்க பதிவு சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
💦 இன்றைய தற்சோதனை
💦 நம்முடைய பழக்கவழக்கங்கள் ஒரு புரிதலோடும், தெளிவான சிந்தனையோடும் இருக்கும்படி அமைந்ததுக் கொள்ளவதும், நாம் திட்டமிட்டு நம் செயல்களை ஒழுங்குமுறை படுத்திக் கொள்ளவதும் மிகவும் அவசியம். ஆன்மீக உயர்வுக்கு தகுந்த பழக்கவழக்கங்கள் அவைகள் தான். இதனை நன்றாக தற்சோதனை செய்து நமதாக்கி கொள்வோம்.
💦 இன்றைய பண்புப்பயிற்சி
💦 ஆளுமை பண்பில் நமக்குள்ளாக வளரும்போதுதான் உயர்ந்ததொரு ஆன்மீக வாழ்க்கை நமக்கு அமைகிறது. இந்த ஆன்மீக ஆளுமை பண்பு நம்மை நாமே ஆட்சி செய்வது, நெறியோடும், முறையோடும் வாழ்வது. இந்த நல்லதொரு பண்பே ஆன்மீக அறிவுக்கு உகந்த பண்பாகும். வாழ்க வளமுடன்...
💦 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💦 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment